'ஆன்லைன்' மூலமா பழக்கமான பெண்ணுக்கு... சர்ப்ரைஸா 'பர்த் டே' வாழ்த்து சொல்ல... 2,000 கி.மீ பயணித்த 'இளைஞர்'... ஆனா 'கடைசி'ல இப்படி ஒரு 'ட்விஸ்ட்டா'??!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சுமார் 2000 கிலோமீட்டர் தூரம் பயணித்து தனது காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முயற்சித்த சம்பவம், இறுதியில் அதிர்ச்சியில் முடிந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சல்மான் என்ற இளைஞர், ஆன்லைன் மூலம் பெண் ஒருவருடன் பேசி வந்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணின் பிறந்தநாள் தினத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சல்மான் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி, பெங்களூரில் இருந்து லக்னோவிற்கு விமானம் மூலம் கிளம்பிய சல்மான், அங்கிருந்து பின்னர் பேருந்து மூலம் தனது காதலி வசிக்கும் லக்கிம்பூர் கேரி பகுதிக்கு வந்தடைந்துள்ளார். சுமார் 2000 கி.மீ வரை பயணம் செய்து வந்த சல்மான், அந்த பெண்ணிற்காக சாக்லேட்டுகள் மற்றும் பரிசு பொருட்களை அதிகம் வாங்கி வந்துள்ளார்.
நேரடியாக அந்த பெண்ணின் வீட்டிற்கு சல்மான் சென்ற நிலையில், புதிதாக ஒருவர் தங்களது வீட்டிற்கு வந்ததைக் கண்ட பெண்ணின் பெற்றோர்கள், சந்தேகத்தின் பெயரில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார், இளைஞரை பிடித்து சென்று ஒரு இரவு முழுவதும் காவல் நிலையத்தில் உட்கார வைத்தனர்.
ஆன்லைன் மூலம் அந்த பெண்ணுடன் நட்பை வளர்த்துக் கொண்டதாக தெரிவித்த சல்மான், அவரது பிறந்தநாளுக்கு வேண்டி இத்தனை தூரம் பயணித்து வந்ததை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு போலீசார் இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.