ஒரு 'ஏவுகணை' இத்தனை 'வேலை' செய்யுமா...? 'அசுரத்தனமான பவர்...' 'அலற விடும் நாடு...' - 'அணு' ஆயுதத்தையே அடிச்சு நொறுக்கிடும்...!
முகப்பு > செய்திகள் > உலகம்தென்கொரிய நாடு சுமார் 300 முதல் 400 கிலோமீட்டர் தாண்டி சென்று தாக்கக் கூடிய ஏவுகணையை தயாரித்து வருகிறது.
அமெரிக்கா தென் கொரியா ஏவுகணை தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சில நாட்களுக்கு முன்பு விலக்கிக் கொண்டது. இந்நிலையில் தென்கொரியா சுமார் 3 டன் எடையுடைய, அணு ஆயுதத்துக்கு நிகரான சக்தி கொண்ட ஏவுகணையை தயாரித்து வருகிறது.
பொதுவாகவே வடக்கொரியா தான் அணு ஆயுதங்களை தயாரிக்க அதிக செலவு செய்யும் என்ற நிலையில் இப்போது தென்கொரியாவும் ஏவுகணை தயாரிப்பில் மும்மூரமாக இறங்கியுள்ளது.
தென் கொரியாவின் யோன்ஹேப் செய்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில், தென் கொரியாவின் இந்த புதிய ஏவுகணை தரைவிட்டு தரை பாயக் கூடியது. 350 முதல் 400 கி.மீ தூரம் செல்லக் கூடியது எனவும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், அணுஆயுத ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்கக் கூடியது எனவும் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த ஏவுகணை சுரங்கங்களைக் கூட ஊடுருவி அழிக்கும் திறன் வாய்ந்தது. இது வட கொரியாவின் அனைத்துப் பகுதிகளையும் தகர்க்கக் கூடியது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாங்கள் உருவாக்கிய இந்த ஏவுகணையை குறித்து தென் கொரிய அரசும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 'கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமைதியை நிலைநாட்டவும் வலுவான, அதிக தூரம் சென்று இலக்கைத் தாக்கக் கூடிய, துல்லியமான ஏவுகணைகள் தயாரிப்போம்' என அதில் கூறியுள்ளது.
தென் கொரியா தனது பட்ஜெட்டில், 315.2 ட்ரில்லியன் வான் (அந்நாட்டு நாணயம்) அதாவது அமெரிக்க டாலர் மதிப்பில் 273 பில்லியன் டாலரை ராணுவத்துக்கு ஒதுக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.