அம்மா மாதிரி இருக்கு.. கோவையில் பஸ் பின்னாடியே ஓடுன குட்டிக்குதிரை.. கண்கலங்க வெச்ச சம்பவம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்அவ்வப்போது இணையத்தில் ஏதாவது வீடியோக்கள் வெளியாகி, பார்ப்போர் பலரையும் ஒரு நிமிடம் உறைய வைக்கும் வகையில் அமைந்திருக்கும்.

அந்த வீடியோவை ஒரு தடவை பார்த்தாலே அடுத்த சில நிமிடங்கள் கண்ணில் ஆனந்த கண்ணீர் தான் பெருக்கெடுத்து ஓடும். அந்த அளவுக்கு அதில் ஏதாவது ஒரு விஷயம், நமக்கு மிகவும் நெருக்கமானதாகவோ அல்லது எளிதில் நம்மால் தொடர்புபடுத்தக் கூடிய வகையிலோ அமைந்திருக்கும்.
இப்படி இணையத்தில், நம் மனதை விட்டு வெகு எளிதில் மறைந்து விடாத வகையிலான வீடியோக்கள் நிறைய நிரம்பிக் கிடக்கின்றன.
அந்த வகையில், தற்போது இணையத்தில் வலம் வரும் குதிரை ஒன்றின் வீடியோவும், அதன் பின்னால் உள்ள காரணமும் அப்படியே ஒரு நிமிடம் நம்மை மனம் நொறுக்கும் வகையில் தான் அமைந்துள்ளது. கோவை மாவட்டம், பேரூர் என்னும் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், பேருந்து ஒன்றின் பின்னால் அப்பகுதியில் வலம் வரும் குதிரை ஓட்டம் எடுக்கிறது.
சற்று போக்குவரத்தும் அந்த சமயத்தில் உருவாகி விடும் நிலையில், பேருந்தை சுற்றி சுற்றியும், அதற்கு ஈடு கொடுத்துக் கொண்டும் அந்த குதிரை ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் குதிரை ஏன் இப்படி ஒரு பேருந்தை மட்டும் குறி வைத்து ஓடுகிறது என்ற கேள்வி அப்பகுதியில் உள்ள பலருக்கும் எழலாம். ஆனால், அப்படி குதிரை செய்ததற்கான காரணம் என்னவென்றால், அந்த பேருந்தில் குதிரை படம் ஒன்று இடம் பெற்றுள்ளது தான்.
பேருந்துக்கு பின் ஓடிய குதிரை இருக்கும் அதே நிறத்தில், பேருந்திலும் குதிரை படம் இடம்பெற்றிருப்பதால் தாய் பாசத்தில் அதனை தனது தாயாகவே கருதி அந்த குதிரை ஓடுவதாக பலரும் குறிப்பிட்டனர். மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில், தன்னுடைய தாய் தான் என குதிரை படத்தை உண்மை என நினைத்து ஓடும் குதிரையின் செயல், அப்பகுதியில் உள்ளவர்களை மட்டும் கலங்கடிக்காமல் வீடியோ பார்க்கும் நபர்களையும் ஒரு நிமிடம் உருக வைத்துள்ளது.
இந்த வீடியோவை காணும் நெட்டிசன்கள் பலரும் சமீபத்தில் கண்ட சிறந்த வீடியோ இது தான் என்றும், இணையத்தில் கண்ட அற்புதம் என்றும் இதனை குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
