'பெண்களை' விட ஆண்களை... கொரோனா அதிகமா 'தாக்குறதுக்கு' காரணம் இதுதானாம்... உடைந்த மர்மம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | May 15, 2020 11:20 PM

உலகளவில் ஆண்களே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால் ஏன் பெண்களை விட ஆண்களை கொரோனா அதிகம் தாக்குகிறது? என்பது மர்மமான ஒன்றாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த ரகசியம் உடைந்துள்ளது.

Why men are dying more from COVID-19 than women?, Details Listed!

அதன்படி பெண்களிடம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் தான் அவர்களைக் காக்கும் வேலையை செய்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர். ஆண்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பதில்லை. கொரொனா வைரஸ் ACE 2 புரோட்டீனை பயன்படுத்திய மனித உடலில் உள்ள செல்களை தாக்குகிறது. இது பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக இருப்பதால் இயல்பாகவே அவர்கள் எளிதாக பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஐரோப்பிய இதயநோய் பத்திரிகை ஒன்றில் வெளியான ஆய்வு முடிவு.

ஈஸ்ட்ரோஜன் ACE 2 புரோட்டீனை பாதிப்பதால் கொரொனா வைரஸுக்கு பெண்களிடம் இயல்பாகவே ஒரு எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது.TLR எனப்படும் ஜீன் அதாவது டால் லைக் ரிசப்டார்ஸ் என்ற ஜீன் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த TLR ஜீன் எக்ஸ் குரோமோசோமில் அதிகம் காணப்படுகிறது .ஆண்களுக்கு ஒரு எக்ஸ் குரோமோசோம் உடனும் பெண்கள் இரண்டு எக்ஸ் குரோமோசோம் உடனும் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பெண்களுக்கு அதிகமாக காணப்படுகிறது.

மும்பையில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 68 பேரிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் படி நெகடிவ் ரிசல்ட் உள்ள பெண்களிடம் கொரொனா கிருமிகள் 4 நாட்களில் முழுவதும் மறைகிறது. ஆனால் ஆண்களிடம் மறைய 6 நாட்கள் ஆகிறது என தெரியவந்துள்ளது.