'ஐயோ' 'பேய் குழந்தை'...'அலறி துடித்த தாய்'...'வைரலாகும் புகைப்படம்'...உண்மையிலே பேய் தானா?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Oct 23, 2019 05:48 PM

இணையத்தில் வைரலான இந்த புகைப்படம் பலரையும் கலங்கடித்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அந்த புகைப்படத்தை பதிவிட்ட தாய், தனது குழந்தையின் அருகில் பேய் இருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்ததே காரணம்.

Mom freaks out after seeing ghost baby on baby monitor

அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்தவர் மரிட்ஸா சிபுல்ஸ். இவர் தனது 18 மாத குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு பின்னர் மானிட்டரை பார்த்துள்ளார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. அவர் தனது குழந்தையின் அருகில் மற்றொரு உருவம் ஒன்று படுத்திருப்பதை  பார்த்துள்ளார். தான் பார்த்த உருவத்தை புகைப்படத்திலும் பதிவு செய்துள்ளார்.

மரிட்ஸாவிற்கு பேய்களின் மீது நம்பிக்கை இல்லையென்றாலும் தன் கண்ணால் கண்டதை அவரால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இதையடுத்து இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. 2.9 லட்சத்திற்கும் அதிகமாக ஷேர் செய்துள்ளனர். 5 லட்சம் கமெண்டுகளுடன் வைரலாகியிருந்தது. இதனிடையே மறுநாள் காலையில் தான் இந்த விஷயத்திற்கும் தர்க்க ரீதியான விளக்கம் அவருக்கு கிடைத்தது.

காலையில் தனது மகனின் அறைக்கு சென்ற அவர்,  ‘பேய் குழந்தை' என்று நினைத்தது மெத்தையில் இருந்த வடிவமைப்பை பார்த்துத்தான். மெத்தைக்கு மேலே இருந்த விரிப்பை அவரது கணவர் வைக்க மறந்துள்ளார்.  இரவு தூங்குவதற்கு முன்பு படுக்கை விரிப்பை மாற்றியுள்ளார். ஆனால், மேட்ரஸை வைக்க மறந்துள்ளார். இதுதான் அவருக்கு பேய் போன்று தெரிந்து, அவரும் பயந்தது இல்லாமல் பலரையும் பயம் கட்டிவிட்டார்.

Tags : #TWITTER #FACEBOOK #GHOST BABY