"உங்க ஒடம்புல ஒரு 'பவர்' இருக்கு"... ஆனா உங்க குடும்பத்துல சில 'தீய' சக்தி இருக்கு... அத வெரட்டணும்னா நான் சொல்றத செய்ங்க... 'மந்திரவாதி' சொன்னத நம்பி... கொடூரத்தின் உச்சத்திற்கு சென்ற 'இளம்பெண்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாதீய சக்தி உள்ளதாக கூறி மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு இளம்பெண் ஒருவர் குடும்பத்தினரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Maharashtra woman allegedly battered her uncle and grandmother Maharashtra woman allegedly battered her uncle and grandmother](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/maharashtra-woman-allegedly-battered-her-uncle-and-grandmother.jpg)
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் இளம்பெண் கவிதா. இவர் தனது உறவினர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து கொண்டு அப்பகுதியில் உள்ள தாந்த்ரீகம் செய்யும் சுரேந்திர பாட்டீல் என்பவரை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
அப்போது, அந்த மந்திரவாதி, கவிதா உடம்பில் அமானுஷ்ய சக்திகள் அதிகம் உள்ளதாகவும், உங்களது மாமனார் மற்றும் பாட்டி உடம்பில் தீய சக்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், அவர்களின் உடம்பிலுள்ள தீய சக்தியை எப்படி ஒழித்து விரட்ட வேண்டும் என மந்திரவாதி மூவரிடமும் கூறியுள்ளார். இதனை நம்பி வீட்டுக்கு சென்ற கவிதா உட்பட மூவரும், மந்திரவாதி சொன்னது போல, கவிதா தனது வயதான மாமனார் மற்றும் பாட்டியின் உடம்பிலுள்ள தீய சக்தியை போக்க இருவரது உடம்பிலும் மஞ்சள் பொடி தேய்த்து பின் இருவரையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். மூவரும் வயதானவர்களை கடுமையாக தாக்கியதில் கவிதாவின் மாமனார் மற்றும் பாட்டி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மந்திரவாதி பேச்சைக் கேட்டு தனது மாமனார் மற்றும் பாட்டியை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கவிதா, அவரது உறவினர்கள் இரண்டு பேர், மந்திரவாதி என சம்மந்தப்பட்ட நான்கு பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)