VIDEO : பெய்ரூட் 'வெடி' விபத்து : அதிர வைத்த சத்தத்திற்கு நடுவே... சேதமடைந்த மருத்துவமனையில்... பூமியில் காலடி எடுத்து வைத்த அதிசய 'குழந்தை'... உருக்கமான 'நிகழ்வு'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் பகுதியில் நடைபெற்ற வெடி விபத்து உலகம் முழுவதையும் நிலைகுலைய செய்தது.
பல கிலோமீட்டர்களுக்கு இந்த வெடி விபத்து அதிர்வுகளை உண்டாக்கிய நிலையில், இந்த விபத்தின் காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல, பல இடங்கள் தரைமட்டமான நிலையில், தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து பலர் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெய்ரூட் வெடி விபத்து நடந்த அதே தருணம், அங்குள்ள மருத்துவமனையில் குழந்தை ஒன்று பிறந்தது தொடர்பான வீடியோ ஒன்று வெளியான நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எம்மானுஎல்லே என்ற பெண் பிரவசத்திற்காக பெய்ரூட் பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அழைத்துச் சென்ற நிலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
அப்போது அங்குள்ள கண்ணாடி மற்றும் அந்த பகுதிகள் சேதமடைந்த நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இவையனைத்தும், அந்த பெண்ணின் கணவர் வீடியோ எடுத்ததில் பதிவாகி இருந்தது. இத்தனை இக்கட்டான நிலையிலும் சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் தற்போது குழந்தை மற்றும் தாய் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இது தொடர்பாக குழந்தையின் தந்தை, 'நாங்கள் உயிரோடு திரும்பியதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. கடினமான சூழ்நிலையிலும் என் குழந்தையை சிறந்த முறையில் உலகிற்கு கொண்டு வந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு மற்றும் விடீயோக்கள் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.