VIDEO : லெபனான் 'வெடி' விபத்து - 'சிதைந்து' கிடக்கும் வீட்டிற்கு நடுவே... மெல்லியதாய் ஒலிக்கும் 'பியானோ' 'இசை'... இதயத்தை நொறுங்க வைக்கும் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்லெபனான் நாட்டின் தலைநகரமான பெய்ரூட்டில் இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்ற வெடி விபத்து உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நூற்றுக்கணக்கானோர் இதுவரை உயிரிழந்த நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்து நடந்த பகுதிகளில் இருந்து பல வீடியோக்கள் வெளியாகி அங்கு நடந்த அழிவின் தருணங்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.
அதே போல, மற்றொரு வீடியோவும் வெளியாகி, பார்ப்பவர்களின் மனதை உருக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. அந்த வீடியோவில், வயதான பெண்மணி ஒருவர் பியானோ வாசித்து கொண்டிருக்கும் நிலையில், அவரது வீடு முழுவதும் வெடி விபத்தின் காரணமாக சேதமடைந்து கிடக்கிறது. மிகப்பெரும் விபத்து கண்முன் நடந்து முடிந்த போதும், தாங்கள் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையை குறிக்கும் விதமாக அவரது செயல் அமைந்துள்ளது.
மேலும், அவர் வாசித்த இசை, டைட்டானிக் படத்தில் வரும் இசையெனவும், அந்த தருணங்களை நினைத்து உருக வைப்பதாகவும் சிலர் கமெண்ட் செய்திருந்தனர். இது போன்ற பல வீடியோக்களும் வெளியாகி அங்குள்ள கடினமான சூழ்நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது.
These beautiful people continue to keep Beirut alive 🌿❤️#Beirut#PrayForLebanon#Lebanon#انفجار_المرفأ#لبنان#بيروت_في_قلوبنا pic.twitter.com/esJzqIiTZC
— Mohammad Yassin (@m7mdyasen) August 5, 2020