"ரொம்ப நாளா வீட்டிற்கு அடியில் இருந்த 'சுரங்கம்'.. இது எப்படி எனக்கு தெரியாம போச்சு??..." ஷாக்கான 'கணவர்'... இறுதியில் மனைவியால் காத்திருந்த 'பேரதிர்ச்சி'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்மெக்ஸிகோ பகுதியைச் சேர்ந்தவர் அல்பர்ட்டோ (Alberto). கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் அல்பர்ட்டோவுக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த திருமணமான வேறொரு பெண்ணுடன் ரகசியமாக உறவு இருந்து வந்துள்ளது.
![mexico man build secret tunnel to meet his lover in her house mexico man build secret tunnel to meet his lover in her house](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/mexico-man-build-secret-tunnel-to-meet-his-lover-in-her-house.jpg)
இதனையடுத்து, தனது காதலி பமீலாவை அடிக்கடி சந்திக்க வேண்டி, தனது வீட்டில் இருந்து பமீலா வீட்டிற்கு சுரங்கம் ஓன்றை வீட்டின் அடித்தளத்தில் இருந்து ஆல்பர்ட்டோ அமைத்துள்ளார். பமீலாவின் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில், சுரங்கம் மூலம் வந்து காதலியை ஆல்பர்ட்டோ சந்தித்து தனிமையில் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், திடீரென ஒரு நாள் பமீலாவின் கணவர் சீக்கிரமாக வேலை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது மனைவி வேறொருவருடன் தனிமையில் இருந்ததை கையும் களவுமாக பிடித்துள்ள நிலையில், ஆல்பர்ட்டோ அங்கிருந்த சோஃபா ஒன்றின் பின் மறைந்து பின்னர் காணாமல் போயுள்ளார். அப்போது, பமீலாவின் கணவர் சோஃபா அருகே ஓட்டை ஒன்று இருந்ததை கவனித்த நிலையில், அங்கு ஒரு சுரங்கத்திற்கான வழி இருப்பதையும் கண்டுள்ளார்.
பின்னர், அதன் வழி இறங்கி நடந்து சென்ற போது, அந்த சுரங்கம் ஆல்பர்ட்டோவின் வீட்டிற்கு சென்றுள்ளது. அங்கு சென்று ஆல்பர்ட்டோவிடம் அந்த பெண்ணின் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்து உடனடியாக கிளம்ப வேண்டும் என்றும், தனது மனைவிக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் ஆல்பர்ட்டோ கெஞ்சியுள்ளார். ஆனாலும், அந்த கணவர் உடன்படாத நிலையில், இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். காதலியைக் காண இரு வீட்டுக்கு இடையே சுரங்கம் ஒன்றை நபர் அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)