மனைவியுடன் மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்ட அறிவிப்பு.. வாழ்த்து மழை பொழியும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக பணக்காரர்களில் ஒருவரும் பேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனருமான மார்க் ஸக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு பற்றித்தான் தற்போது பலரும் பேசிவருகின்றனர்.
Also Read | நடிகர் பங்கஜ் திரிபாதி கொடுத்த சூப்பர் அட்வைஸ்.. வைரல் வீடியோ..!
மார்க் ஸக்கர்பெர்க்
கடந்த 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர் மார்க் ஸக்கர்பெர்க். இவர் தனது 19 வயதில் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது, தனது நண்பர்களுடன் இணைந்து பேஸ்புக்கை உருவாக்கினார். முதலில் நண்பர்களுக்குள் உரையாடவும் படங்களை பகிரவும் பயன்படுத்தப்பட்ட இந்த சமூக வலை தளத்தை 2012 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார் மார்க். அதன்பிறகு, வாட்சப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபல சமூக வலை தளங்களையும் கைப்பற்றியது பேஸ்புக். இந்த மூன்று சமூக வலை தளங்களுக்கும் தாய் நிறுவனமாக மெட்டா திகழ்கிறது. இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக மார்க் செயல்பட்டு வருகிறார்.
திருமணம்
மார்க் ஸக்கர்பெர்க் தனது மனைவியை முதன்முறை கடந்த 2003 ஆம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சந்தித்தார். இரண்டாம் ஆண்டு மாணவராக மார்க் இருந்தபோது, பிரிசில்லா சான்-ஐ அவர் சந்தித்திருக்கிறார். பல்கலைக்கழகத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது இருவருக்குமான சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து இருவரும் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் நட்பு காதலாக மாற 2010 ஆம் ஆண்டு முதல் இருவரும் ஒன்றாக வசிக்கத் துவங்கினர். இந்த தம்பதிக்கு 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் இந்த தம்பதி தங்களது 10 வது திருமண விழாவை கொண்டாடினர். இந்த தம்பதிக்கு ஆகஸ்ட் மற்றும் மேக்ஸிமா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தற்போது ஆகஸ்ட்-ற்கு 5 வயதும் மேக்ஸிமாவிற்கு 6 வயதும் ஆகிறது.
அறிவிப்பு
இந்நிலையில், மார்க் ஸக்கர்பெர்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனது மனையுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். மேலும் அதில்,"மேக்ஸ் மற்றும் ஆகஸ்ட் அடுத்த ஆண்டு ஒரு புதிய சகோதரியைப் பெற இருக்கிறார்கள் என்ற செய்தியை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நெட்டிசன்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read | மருத்துவமனையில் நடிகர் போண்டா மணி நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்..!