Kaateri logo top

WHATSAPP-ல் வர இருக்கும் 3 முக்கிய அம்சங்கள்.. மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்ட அறிவிப்பு.. ஜாலி மோடில் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Madhavan P | Aug 09, 2022 01:54 PM

வாட்ஸாப்பில் புதிதாக 3 தனியுரிமை பாதுகாப்பு வசதிகளை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார் மார்க் ஸக்கர்பெர்க். இதனால் நெட்டிசன்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

Mark Zuckerberg announced 3 key privacy features in WhatsApp

Also Read | "இது எப்படி இங்க வந்துச்சு".. அட்லாண்டிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட வினோத உயிரினம்.. கலர்ஃபுல்லா இருக்கே..!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸாப் செயலியை உபயோகித்துக்கொண்டு வருகின்றனர். இந்த அப்ளிகேஷனின் பிரைவசி குறித்து தொடர்ந்து மெட்டா நிறுவனம் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. அதன் பலனாக அவ்வப்போது பிரைவசி அப்டேட் அளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், மெட்டா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு தற்போது வைரலாக பரவி வருகிறது.

Mark Zuckerberg announced 3 key privacy features in WhatsApp

3 முக்கிய அம்சங்கள்

மார்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வாட்ஸாப் குழுக்களில் இருந்து நீங்கள் விலகும்போது அந்த தகவலை பிறர் அறியமுடியாத வகையில் புதிய அம்சம் கொன்டுவரப்பட இருக்கிறது. பொதுவாக வாட்ஸாப் குழுக்களில் இருந்து நாம் விலகும்போது குழுவில் இருப்பவர்கள் அதனை அறிவார்கள். ஆனால், இனி ஒருவர் விலகும் போது குழுவில் இருக்கும் அட்மினை தவிர பிறர் அறிய முடியாது.

அதேபோல, நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்களா என்பதை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மறைக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மார்க் அறிவித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல், ஒருமுறை மட்டுமே பார்க்கும்படியான செய்திகளை (view once messages) ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாதபடி புதிய அப்டேட்டை அளிக்க இருப்பதாகவும் மார்க் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இப்புதிய அப்டேட் இந்த மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.

Mark Zuckerberg announced 3 key privacy features in WhatsApp

பாதுகாப்பு

இதுகுறித்து மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்டுள்ள பதிவில் பயனர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில்,"பயனர்களின் செய்திகளைப் பாதுகாப்பதற்கான புதிய வழிகளை உருவாக்கி, அவற்றை தனிப்பட்டதாகவும், நேருக்கு நேர் உரையாடல்களாக பாதுகாப்பாகவும் வைத்திருப்போம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Mark Zuckerberg announced 3 key privacy features in WhatsApp

முன்னதாக வாட்ஸாப்பில் அனுப்பப்பட்ட மெசேஜை யாரும் அறியாத வண்ணம் அழிக்கும் Delete For Everyone வசதியில் அப்டேட் கொண்டுவர இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. அதாவது ஒருவருக்கு அனுப்பிய செய்தியை Delete For Everyone மூலம் அழிக்கும் போது எதிர்முனையில் இருப்பவருடைய அப்ளிகேஷனிலும் அந்த செய்தி அளிக்கப்படும். துவக்கத்தில் இந்த கால அளவு 7 நிமிடங்களாக இருந்தது. நீங்கள் அனுப்பிய மெசேஜை 7 நிமிடங்களுக்குள் Delete For Everyone மூலமாக எதிர் தரப்பில் இருப்பவருடைய அப்ளிகேஷனிலும் அழிக்கலாம். இந்த கால அளவை இரண்டு நாட்களாக நீட்டிக்க இருப்பதாக அந்நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "தூங்குனா போதும்.. சம்பளம் தர்றோம்".. திகைக்க வச்ச நிறுவனத்தின் Job ஆஃபர்.. படையெடுக்கும் நெட்டிசன்கள்..!

Tags : #WHATSAPPUPDATE #MARK ZUCKERBERG #PRIVACY FEATURES #WHATSAPP #WHATSAPP MESSAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mark Zuckerberg announced 3 key privacy features in WhatsApp | Business News.