VIDEO: ‘சீக்கிரம் உள்ள வாங்க’!.. பூக்கடைக்குள் நுழைந்த அடுத்த நொடி நடந்த பயங்கரம்.. பரபரக்க வைத்த சிசிடிவி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்புயலால் இடிந்து விழுந்த மேற்கூரையிடமிருந்து இளைஞர் ஒருவர் நூலிழையில் தப்பிய சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியில் பலத்த புயல் காற்றுடன் பெய்து வரும் கனமழையால் பல மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன மற்றும் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் சாலையின் ஓரமாக நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர், இடிந்து விழும் மேற்கூரையிடம் இருந்து தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 9ம் தேதி இஸ்தான்புல் பகுதியில் பலத்த சூரைக்காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது சாலையோரம் இருந்த பூக்கடை ஊழியர், கடையின் வெளியே இருந்த பூந்தொட்டி ஒன்றை உள்ளே எடுத்துவைத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது இளைஞர் ஒருவர் சாலையோரம் நின்றுகொண்டு இருந்துள்ளார். காற்று வேகமாக வீசுவதை அறிந்து பூக்கடை ஊழியர், அவரை கடைக்கு வரச் சொன்னார். அவர் பூக்கடைக்குள் நுழைந்த அடுத்த நொடியே கடையின் முன்கூரை இடிந்து விழுந்தது.
Surveillance footage in Istanbul, Turkey captures the moment a man takes refuge inside a store just seconds before a roof is brought down by heavy winds. pic.twitter.com/BWJqSZXGME
— CBS News (@CBSNews) February 9, 2021
இன்னும் சில நொடிகள் அந்த இளைஞர் அங்கு நின்றிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். இவை அனைத்தும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.