"மனைவி கோபத்தால இப்டி எல்லாம் கூட அதிர்ஷ்டம் அடிக்குமா பாஸ்?".. மில்லியனில் புரண்ட கணவர்!!.. காரணம் இது தான்!!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக ஒருவரது வாழ்வில் எப்போது எந்த நேரத்தில் எப்படி அதிர்ஷ்டம் வரும் என்பதை சொல்லவே முடியாது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "2024 ஐபிஎல் -லயும் தோனி ஆடுவாரா?".. பிரபல கிரிக்கெட் வீரர் கருத்தால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
எப்போதும் போல வாழ்க்கை போய்க் கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென ஏதாவது ஒரு விஷயத்தால் அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்து மொத்த வாழ்க்கையும் அப்படி திருப்பி போடும் வகையில் அமையும்.
அதிலும் குறிப்பாக இந்த லாட்டரி டிக்கெட் வாங்குவதன் மூலம் பலரது வாழ்க்கை மாறுவதை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் லாட்டரி வாங்கிய நபர் ஒருவருக்கு மனைவியின் கோபத்தின் துணையுடன் பெருந்தொகை பரிசாக கிடைத்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டின் வோல்லோங்கொங் என்னும் பகுதி அருகே அமைந்துள்ள டாப்டோ என்னும் இடத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தான் ஒரே வாரத்தில் ஒருமுறை அல்ல இரண்டு முறை லாட்டரியில் பெருந்தொகை பரிசாக கிடைத்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம், அந்த லாட்டரி வாங்கிய நபரின் மனைவியின் கோபம் தான். இது தொடர்பாக தனது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளாத அந்த வெற்றியாளர் தெரிவித்துள்ள தகவலின் படி அவர் எப்போதுமே தனது மனைவி சொல்லும் ஒரு எண்ணில் மட்டும் தான் லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.
ஆனால் கடந்த வாரம் மனைவியின் பேச்சை மாற்றி வைத்துவிட்டு புதிதாக ஒரு எண்ணில் லாட்டரியை அந்த கணவர் வாங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதனை அறிந்ததும் அந்த மனைவியோ கணவர் மீது மிகுந்த கோபமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் மனைவியின் கோபத்தை தணிப்பதற்காக அவரது மனைவி சொல்லும் அதே எண்ணில் இரண்டு முறை லாட்டரி வாங்கியுள்ளார் அந்த கணவர்.
அப்படி அவர் வாங்கிய சமயத்தில் தான் மொத்தமாக இரண்டு ஜாக்பாட் அடித்து வாழ்க்கையை திருப்பி போட்டுள்ளது. அதன்படி இரண்டு லாட்டரி சீட்டுகளுக்கும் பரிசுத் தொகை விழுந்துள்ள சூழலில் மொத்தமாக 2 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அந்த தம்பதியருக்கு பரிசு கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இது இந்திய மதிப்பில் சுமார் 11 கோடி ரூபாய் ஆகும்.
அவரது மனைவி கடந்த 30 ஆண்டுகளாக இதே எண்ணில் தான் லாட்டரி விளையாடி வருவதாக சொல்லப்படும் நிலையில் இந்த பெருந்தொகையை வென்றதற்கு மனைவியின் கோபம் தான் காரணம் என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.