லாட்டரியில் பரிசாக கிடைத்த 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்.. கொஞ்ச நாளிலேயே நடந்த துயரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்100 ரூபாய் செலவழித்து சொகுசு காரை வாங்கிய இளைஞர் ஒருவர் பற்றித்தான் தற்போது மொத்த பிரிட்டனும் பேசி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
லாட்டரி
உலகின் பல நாடுகளில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. தங்களுடைய அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க விரும்பும் நபர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனாலும் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என யார்தான் சொல்லி விட முடியும்? ஒரே லாட்டரி டிக்கெட் மூலம் திடீரென பெரும் பணக்காரர்களான நபர்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படியான சம்பவம் ஒன்று தான் க்ராண்ட் பர்னட் எனும் இளைஞரின் வாழ்க்கையிலும் நாட்டிலும் நடைபெற்றிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
லம்போர்கினி ஹுராகேன்
ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவர் க்ராண்ட் பர்னட் எனும் இளைஞர். 24 வயதான இவருக்கு லாட்டரி வாங்குவதில் ஈடுபாடு அதிகமாம். அப்படி இவர் சமீபத்தில் வாங்கியிருந்த லாட்டரி டிக்கெட்டில் ஜாக்பாட் அடித்திருக்கிறது. 99 பென்ஸ் தொகையில் (இந்திய மதிப்பில் சுமார் 100 ரூபாய்) அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு லம்போர்கினி ஹுராகேன் கார் பரிசாக கிடைத்திருக்கிறது. அதேவேளையில் கார் வேண்டாம் என்றால் 1,00,000 யூரோ பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என லாட்டரி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. க்ராண்ட் பர்னட் காரையே தேர்வு செய்திருக்கிறார்.
சொகுசு கார்
பொதுவாக லம்போர்கினி கார்கள் என்றாலே பலருக்கும் உள்ளுக்குள் ஆசை பிறக்கும். ஒருமுறையாவது அந்த காரை ஒட்டிவிடவேண்டும் என பலரும் நினைத்திருப்பார்கள். அப்படி இருக்க, லம்போர்கினியின் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாக கருதப்படும் ஹுராகேன் கார் என்றால் சொல்லவா வேண்டும்?. உடனடியாக பர்னட் இந்த காரை பெற்றிருக்கிறார். இதன் விலை இந்திய மதிப்பில் 3 - 4 கோடி ரூபாய் ஆகும்.
Images are subject to © copyright to their respective owners.
சோகம்
தனக்கு பரிசாக கிடைத்த காருடன் பர்னட் புகைப்படங்களை எடுத்து தனது சோசியல் மீடியா பக்கங்களில் பெருமையுடன் பதிவிட்டு வந்தார். இந்த சூழ்நிலையில் அண்மையில் தனது கனவு காரில் சென்றபோது விபத்து நேர்ந்ததாக போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார் பர்னட். அதில் சேதமடைந்த காரின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், வேகமாக காரை ஓட்டிச் சென்றபோது மாடு குறுக்கே வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த போஸ்ட் வைரலாகியும் வருகிறது. லாட்டரியில் கனவு கார் கிடைத்த வேளையில் துரதிருஷ்டவசமாக விபத்து நேர்ந்திருப்பது அவரை மட்டும் அல்லது கார் பிரியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மற்ற செய்திகள்
