Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top

நாலு வருசத்துக்கு முன்னாடியே இறந்த நண்பர்.. "அவரோட உடல வீட்டுலயே வெச்சுக்கிட்டு".. நபர் பாத்து வந்த பயங்கர வேலை!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Sep 30, 2022 07:21 PM

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து வெளியுலக தொடர்பில் இல்லாமல் இருந்து வந்த நபர் தொடர்பாக தற்போது தெரிய வந்த உண்மை, உச்சகட்ட திகிலை ஏற்படுத்தி உள்ளது.

man who passed away before 4 years his friend in forgery

கெவின் ஒல்சன் (வயது 64) என்ற நபர், கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். அவரிடம் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக எந்த தகவலும் வராத காரணத்தினால், அவரது குடும்பத்தினர் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள சிஹோ என்னும் பகுதியில் தனது நண்பர் டேவிட்டுடன் சேர்ந்து கெவின் வசித்து வந்துள்ளார். இதனிடையே, கெவினின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 4 ஆண்டுகள் தொடர்பில் இல்லாமல் போன கெவினின் வீட்டை சமீபத்தில் போலீசார் சோதனையிட்டுள்ளனர்.

man who passed away before 4 years his friend in forgery

அப்போது, தேடுதலில் ஈடுபட்ட ஒட்டுமொத்த போலீசாருக்கும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய சம்பவம் ஒன்று அங்கே காத்திருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கெவின் இறந்து விட்டதாகவும், அவரது உடலுடன் அதே வீட்டில் டேவிட் தங்கி வந்ததும் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், கெவின் மரணம் தொடர்பாக போலீசார் தடயம் சேகரித்த போது, இறந்த கெவினின் அடையாளம் மற்றும் அவரது பணத்தை திருடியதற்கான குற்றமும் டேவிட் மீது சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் கெவின் இறந்த பிறகு, அவரது காசோலையை பயன்படுத்தி பண மோசடியில் டேவிட் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

man who passed away before 4 years his friend in forgery

2018 ஆம் ஆண்டிலேயே கெவின் இறந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக கெவின் வங்கி கணக்கில் இருந்து பண பரிமாற்றங்களை டேவிட் நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. அதே போல, கெவினின் உடற்கூராய்வும் விரைவில் நடத்தப்பட்டு அவரது மரணத்திற்கான காரணமும் கண்டறியப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இறந்த நண்பரின் உடலை வீட்டிலேயே வைத்துக் கொண்டு அவரது பெயரில், பணம் உள்ளிட்ட பல மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்த நண்பர் தொடர்பான செய்தி, பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

Tags : #FRIEND #FORGERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man who passed away before 4 years his friend in forgery | World News.