"அவர் வெளிநாடு போகக்கூடாது".. நண்பனின் உயிரை காப்பாற்ற HIGH COURT க்கு சென்ற தோழி.. இந்தியாவிலேயே இப்படி ஒரு வழக்கு நடந்தது இல்லயா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Aug 12, 2022 07:41 PM

தனது நண்பர் வெளிநாடு செல்வதை தடுக்க டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார் அவரது தோழி. இது முன்மாதிரி இல்லாத தனித்துவமான வழக்கு என்கிறார் அந்தப் பெண்ணுடைய வழக்கறிஞர்.

Sick man seeks euthanasia his friend moves Delhi HC

Also Read | உள்ளாடைக்குள் இருந்த ரகசிய உள் பாக்கெட்.. ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.. பரபரப்பான விமான நிலையம்..!

சிகிச்சை

உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 40 வயது நபர் ஒருவருக்கு Chronic Fatigue Syndrome என்னும் நோய்த் தாக்குதல் ஏற்பட்டிருக்கிறது. இது நோயாளியை தொடர்ந்து பலவீனப்படுத்தும், நீண்ட கால நரம்பு அழற்சி நோய் ஆகும். இதற்காக அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இருப்பினும் கொரோனா காலத்தில் அவரால் சிகிச்சையை தொடர முடியவில்லை. குறிப்பாக, தானம் அளிப்பவர்களை கண்டறிய முடியாததால் அவரது சிகிச்சை தடைபட்டிருக்கிறது.

அவருடைய பெற்றோருக்கும் வயதாகிவிட்டதால் சுவிட்சர்லாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கருணை கொலைக்காக விண்ணப்பித்திருக்கிறார் அவர். அவருடைய பெற்றோரும் இதற்கு ஒப்புதல் தெரிவித்ததாக தெரிகிறது. இதற்காக முதற்கட்ட ஆலோசனையை அவர் பெற்றிருப்பதாகவும், இதனை தொடர்ந்து இரண்டாம் மற்றும் இறுதி கட்ட சிகிச்சைக்கு அவர் மீண்டும் ஸ்விட்சர்லாந்து செல்ல இருப்பதாக தெரிகிறது.

Sick man seeks euthanasia his friend moves Delhi HC

தோழியின் போராட்டம்

இதனிடையே அவரால் ஓரிரண்டு சொற்கள் பேசவும், வீட்டுக்குள் சில அடிகள் நடக்கவும் முடியும் என்கிறார் அவரது தோழி. மேலும், தனது நண்பரின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதில், மருத்துவ சிகிச்சைக்காக பெல்ஜியம் செல்ல விரும்புவதாக இந்திய விசா அதிகாரிகளுக்கு பொய்யான தகவல்களை தெரிவித்து அந்த நபர் ஷெங்கன் விசா பெற்றிருக்கிறார். அவர் உண்மையில் பெல்ஜியம் வழியாக சுவிட்சர்லாந்திற்கு சென்று கருணை கொலைக்கான நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக பயணம் செய்கிறார். ஆனால் இந்த தகவலை இந்திய அதிகாரிகளிடம் இருந்து மறைக்கிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்மாதிரி இல்லாத வழக்கு

இதுபற்றி பேசிய அந்த பெண்மணியின் வழக்கறிஞர்,"இது முற்றிலும் முன்மாதிரி இல்லாத  தனித்துவமான வழக்கு. ஒரு நபர் குற்றம் செய்திருந்தால், அதிகாரிகள் பயணம் செய்ய அனுமதி மறுக்கும் வழக்குகள் உள்ளன. இந்தியாவில் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்கு அனுமதி இல்லை. ஆனால் அவர் தனது பயண ஆவணங்களில் தவறான தகவல்களை அளித்திருப்பதால், நீதிமன்றம் தனது அதிகார வரம்பைப் பயன்படுத்துமாறு நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sick man seeks euthanasia his friend moves Delhi HC

உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணை இந்த மாத இறுதியில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read | "இன்னைக்கும் நாளைக்கும் வானத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க".. நாசா ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு..!

Tags : #DEHLI #DELHI HC #SICK MAN #EUTHANASIA #FRIEND #HIGH COURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sick man seeks euthanasia his friend moves Delhi HC | India News.