"ஒரு 'சாதாரண' பல்பு வெச்சு... இப்டி எல்லாமா ஏமாத்தப் பாப்பாங்க??..." பலே 'மோசடி'யில் ஈடுபட்ட 'மூன்று' பேர்... 'அதிர்ச்சி' சம்பவம்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம், லகிம்பூர் கெரி என்னும் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர், தொழிலதிபர் ஒருவரிடம் 9 லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, நிதேஷ் மல்கோத்ரா என்ற அந்த தொழிலதிபர் தனது தொழிலில் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளார். இதனால், மீண்டும் எப்படி பணம் சம்பாதிப்பது என்ற ஆலோசனையில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த சுட்கன் கான், மஸூம் கான் மற்றும் இர்பான் கான் என்ற மூன்று பேர், நிதேஷிடம் சாதாரண பல்பு ஒன்றைக் கொடுத்து, 'இந்த பல்பு தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை ஈர்க்கும் என்றும், இது உங்களிடம் இருந்தால் நீங்கள் செழிப்பாக இருப்பீர்கள்' என்றும் தெரிவித்துள்ளனர்.
அந்த பல்பை மட்டுமே கொடுத்து 9 லட்ச ரூபாயை நிதேஷிடம் இருந்து சுருட்டியுள்ளனர். முன்னதாக, அந்த பல்பிற்குள் காந்தத்தை வைத்து சில ஏமாற்று வித்தைகளைக் காட்டி தொழிலதிபரையும் நம்பச் செய்துள்ளனர் அந்த மோசடி பேர்வழிகள். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிதேஷ், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த மூன்று பேர் மீதும் ஏற்கனவே பழ வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.