"பணம் கூட தர்றோம்..அந்த பேய் பொம்மையை தூக்கிட்டு போய்டுங்க"..கதறிய குடும்பம்.. ஆசைப்பட்டு வாங்கியவருக்கு அடுத்தநாளே காத்திருந்த அதிர்ச்சி.!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய பொம்மையினால் தனக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுவதாக கூறியுள்ளார்.
அமானுஷ்ய விஷயங்கள் குறித்து அறிந்துகொள்ள எப்போதுமே மக்களிடத்தில் ஒரு ஆர்வம் இருக்கிறது. இதன் காரணமாகவே அடு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியானவர்களில் ஒருவர் தான் மைக் யார்க். அமானுஷ்ய விஷயங்கள் குறித்து ஆய்வு செய்துவரும் மைக், கடந்த 2016 ஆம் ஆண்டு ஆன்லைனில் வித்தியாசமான பொம்மை ஒன்றை வாங்கியிருக்கிறார். ஆனால், அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் அவரை திகைக்க வைத்திருக்கின்றன.
119 வருட பொம்மை
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இந்த பொம்மையை வைத்திருக்கிறார். அந்த பொம்மையை பெண்மணியின் குடும்பத்தினர் பலரும் வெறுத்திருக்கிறார்கள். ஆகவே, அதனை பிரிட்டனுக்கு அனுப்பக்கூட முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால் 2016 ஆம் ஆண்டு, அந்த பெண்மணி மரணமடையவே எப்படியாவது பொம்மையை வீட்டை விட்டு வெளியேற்ற நினைத்திருக்கிறது அந்த குடும்பம். அப்போதுதான் ஆன்லைன் மூலமாக அதனை விற்பனை செய்ய குடும்பத்தினர் முடிவெடுத்திருக்கின்றனர்.
கண் சிமிட்டிய பொம்மை
ஆன்லைனில் பொம்மை விற்பனைக்கு வந்திருப்பதை அறிந்த மைக், அதனை ஆர்வத்தோடு வாங்கியிருக்கிறார். ஆனால், அவரது குடும்பத்தினர் அதனை விரும்பவில்லை. இருப்பினும் தொடர்ந்து பொம்மையை தனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்த துவங்கியுள்ளார் மைக். ஒருமுறை கேமராவில் பொம்மையை வீடியோ எடுத்தபோது அது கண்சிமிட்டியதாக கூறும் மைக், அதைப்பற்றி அறிய ஸ்பிரிட் பாக்ஸ் பரிசோதனை செய்திருக்கிறார்.
அப்போது, தனது பெயர் ஜெனட் என அந்த பொம்மை சுட்டிக்காட்டியதாக கூறும் மைக், இந்த பொம்மையினால் பல சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவித்திருக்கிறார். பொம்மையின் அருகே இருந்து பணிபுரியும்போது தனக்கு நெஞ்சு வலி ஏற்படுவதாகவும், தனது நண்பர்களுக்கும் இதேபோல சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அச்சம்
இதுகுறித்து பேசிய மைக்," ஜேனட்-ன் பின்புறம் 1903 என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த பொம்மைக்கு 119 வயது ஆகிறது. ஜேனட் கண்சிமிட்டுவதை குடும்பத்தினர் பலமுறை பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஷெல்பில் வைக்கப்படும் இந்த பொம்மை தானாகவே கீழே விழும். இது வாடிக்கையாகிவிட்டது. இந்த பொம்மைக்குள் சிறுமியின் ஆவி இருக்கிறது. அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன்" என்றார்.