இவ்வளவு பெரிய ஓட்டையுடன் 14 மணிநேரம் பறந்த விமானம்.. 10 லட்சத்துல ஒரு டைம் இப்படி அதிர்ஷ்டம் அடிக்கும்.. வியந்துபோன நிபுணர்கள்.!
முகப்பு > செய்திகள் > உலகம்மிகப்பெரிய துளையுடன் 14 மணி நேரம் பயணித்து பத்திரமாக தரையிறங்கி உள்ளது விமானம் ஒன்று. இது உலகம் முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | மது பாட்டிலால் மகனை தாக்கிய கணவர்.. அடுத்த கணமே மனைவி செய்த பதற வைக்கும் காரியம்.. உறைந்து போன கிராமம்
கடந்த ஜூலை 1 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் விமான நிலையத்துக்கு பறந்திருக்கிறது அமீரகதின் ஏர்பஸ் 380 விமானம். 14 மணி நேரம் நீடித்த இந்த பயணத்திற்கு பின்னர், ஆஸ்திரேலியாவில் விமானம் தரையிறங்கிய பின்னர் தான் பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதன் பக்கவாட்டில் மிகப்பெரிய துளை இருப்பதை அப்போதுதான் பயணிகள் கவனித்திருக்கின்றனர்.
டயர்
ஏர்பஸ் 380 விமானத்தில் மொத்தம் 22 டயர்கள் இருக்கின்றன. இதில் ஒன்று துபாயில் இருந்து டேக் ஆஃப் ஆன கொஞ்ச நேரத்தில் வெடித்ததாக தெரிகிறது. இதனால் விமானத்தின் உள்ளே கடுமையான சத்தம் கேட்டதாகவும் பயணிகள் தெரிவித்திருக்கின்றனர். விமானம் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கும்போது அங்குள்ள விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை விமானிகள் தொடர்புகொண்டு விமானத்தின் டயர்களில் ஒன்று வெடித்துவிட்டதாகவும் அதனால், எமெர்ஜென்சி லேண்டிங்-ற்கு அனுமதி கேட்டதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து பேசிய விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்,"ஜூலை 1 ஆம் தேதி துபாயில் இருந்து பிரிஸ்பேன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் ஒரு டயர் வெடித்ததால் விமானத்தின் வெளிப்புற பகுதி சேதமடைந்தது. இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. அதன்பின்னர் விமானத்தின் கோளாறு நிபுணர்களால் சரி செய்யப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பே எங்களது முதன்மை குறிக்கோளாகும்" என்றார்.
10 லட்சத்தில் ஒரு டைம்
பக்கவாட்டில் ஏற்பட்ட துளையுடன் 14 மணி நேரம் பயணித்து ஆஸ்திரேலியாவில் தரையிறங்கிய ஏர்பஸ் 380 விமானத்தின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், முன்னாள் விமானியும் லண்டனின் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் விமானப் படிப்புகளில் மூத்த விரிவுரையாளருமான டாக்டர் ஜோஹன்னஸ் போரோ இதுபற்றி பேசுகையில்," இதுபோன்ற நிகழ்வு 10 லட்சங்களில் ஒருமுறை மட்டுமே நடக்கும். இதுபோன்ற ஒன்றை பலர் பார்த்திருக்க முடியாது" என்றார்.
Also Read | "சுத்த முட்டாள்தனம்'ங்க இது.." முக்கியமான மேட்சில் பும்ரா செய்த தவறு..? விளாசித் தள்ளிய பீட்டர்சன்