உலக பிரசித்திபெற்ற கேதார்நாத் கோவில்.. தங்கத்தால் இழைக்கப்பட்ட கர்ப்பகிரகம்.. திகைக்க வைக்கும் புகைப்படங்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக பிரசித்திபெற்ற கேதார்நாத் கோவிலில் உள்ள கர்ப்ப கிரகத்தில் தங்க தகடுகள் பதிக்கும் பணிகள் முடிவடைந்திருக்கின்றன. இந்நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
![Kedarnath Temple Walls Ceiling Decorated With 550 Gold Layers Kedarnath Temple Walls Ceiling Decorated With 550 Gold Layers](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/kedarnath-temple-walls-ceiling-decorated-with-550-gold-layers.jpg)
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் குகைக்கோவில் உலக அளவில் பிரசித்திபெற்றது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு கேதார்நாத் யாத்திரைக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த ஆண்டு கேதார்நாத் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு மே 3-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த யாத்திரை இந்த மாத இறுதியில் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், கேதார்நாத் கோவில் அமைந்துள்ள பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் இன்று நடை மூடப்பட்டது. இதனிடையே இந்த கோவிலின் கர்ப்ப கிரகத்தில் தங்க முலாம் பூசும் வேலைகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தன. இதனிடையே இன்று தங்க தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் கேதார்நாத் ஆலயமே ஜொலிக்கிறது.
கோவிலின் கர்ப்ப கிரகத்தில் பதிக்கப்பட்டிருக்கும் தகடுகள் கோவேறு கழுதைகள் மூலமாக மலைப்பகுதிக்கு சுமந்து வரப்பட்டிருக்கின்றன. அதனை தொடர்ந்து நிபுணர்கள் இந்த தகடுகளை பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று தங்க தகடுகள் பதிக்கும் பணி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்ப கிரகத்தில் 550 தங்க தகடுகள் நேர்த்தியான முறையில் பதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுபற்றி பேசிய ஸ்ரீ பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டித் தலைவர் அஜேந்திர அஜய், "கேதார்நாத் கோவிலில் கடந்த மூன்று நாள்களாக இப்பணி நடந்து வந்தது. ஐஐடி ரூர்கி மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகியவற்றைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழு கேதார்நாத் தாமுக்குச் சென்று கோயிலின் கருவறையை ஆய்வு செய்தது. நிபுணர்களின் அறிக்கைக்குப் பிறகு கேதார்நாத் கோயிலின் கருவறையில் தங்கம் பூசும் பணி தொடங்கப்பட்டது. 18 கோவேறு கழுதைகள் மூலம் 550 தங்கத் தகடுகள் மூன்று நாள்களுக்கு முன்பு கேதார்நாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இரண்டு இந்திய தொல்லியல் துறை (ASI) அதிகாரிகளின் மேற்பார்வையில் 19 கைவினைஞர்கள் தங்க அடுக்குகளைப் பதிக்கும் பணியை வெகுசிறப்பாக செய்து முடித்தனர்" என்றார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)