"வந்தது என் கணவர் தான்".. குழந்தைக்கு ஆறுதல் சொல்ல வந்த இறந்த தந்தை?.. அமெரிக்க பெண் பகிர்ந்த வீடியோவால் பரபரப்பு!!
முகப்பு > செய்திகள் > உலகம்அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் நாம் நேரத்தை உலவிடும் போது நம்மை சுற்றி நடைபெறும் எக்கச்சக்க விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

அப்படி இருக்கும் போது நாளுக்கு நாள் ஏராளமான வீடியோக்கள் வைரல் ஆவதை கூட நாம் பார்த்திருப்போம்.
அப்படி வைரல் ஆகும் வீடியோக்கள் அதிர்ச்சிகரமாக, வினோதமாக அல்லது நம்ப முடியாத வகையில் கூட இருக்கும். இந்த நிலையில் தற்போது அப்படி ஒரு வீடியோ தான் இணையத்தில் அதிகம் வைரலாகி பலவரையும் மிரண்டு போக வைத்துள்ளது.
இது தொடர்பாக, Whitney Allen என்ற அமெரிக்க பெண் ஒருவர், தன்னுடைய டிக் டாக் சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தனது 11 மாத குழந்தையை கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள கேமராவில் சிக்கிய காட்சி என்றும் அதனை விட்னி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
விட்னிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவரது கணவரான ரியான், கடந்த ஏப்ரல் மாதத்தில் உடல்நல குறைவால் உயிரிழந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவர் இறப்பதற்கு முன்னர், விட்னி கர்ப்பமாக இருந்த சமயத்தில், ஸ்கேன் செய்து பார்த்த போது குழந்தையின் கழுத்துக்குப் பின்னால் பெரிய கட்டி ஒன்று இருப்பது தெரிய வரவே விட்னி மிகவும் கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை கணவர் ரியான் தான், குழந்தை நல்ல முறையில் பிறக்கும் எனக்கூறி தேற்றி இருந்தார்.
அவர் சொன்னது போலவே, குழந்தை நல்ல நிலையில் பிறக்க, மறுபக்கம் ரியான் உடல்நலக்குறைவால் குழந்தை பிறந்து 4 மாதமான போது உயிரிழந்தார். இந்த நிலையில், விட்னியின் 11 மாத குழந்தை கட்டிலில் தூங்கி கொண்டிருந்த சமயத்தில், அங்கே வைத்திருந்த கேமராவில் பதிவானதாக காட்சி ஒன்றை விட்னி வெளியிட்டுள்ளார். அதில், குழந்தை தூங்கி கொண்டிருக்க, அவர் தலை மீது கை ஒன்று தடவும் காட்சியை வெளியிட்டு, தனது கணவர் ஆவியாக வந்ததாக விட்னி கருதி உள்ளார்.
இது தொடர்பான வீடியோக்கள், தற்போது மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வரும் நிலையில், பலரையும் பரபரப்பு அடைய வைத்துள்ளது. பலரையும் இந்த வீடியோ பீதியில் ஆழ்த்தி இருந்தாலும், மறுபக்கம் இந்த வீடியோவில் நிச்சயம் அந்த குழந்தையின் தந்தை ஆவியாக வரவில்லை என்றும் வேறு ஏதேனும் காரணங்கள் தான் இருக்கும் என்றும் பலர் கருதி வருகின்றனர். இதன் காரணமாக, விட்னி என்ற அமெரிக்க பெண் பகிர்ந்த வீடியோவில் உள்ள உண்மைத் தன்மையும் தற்போது கேள்விக்குறி ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
