‘கொரோனா வைரஸ்’... ‘இப்படித்தான் உருவாக்கப்பட்டது’... ‘நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 19, 2020 07:41 PM

கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் லூக் மான்டேனியர் அதிர்ச்சி தகவல் அளித்து, அதற்கான காரணம் கூறியுள்ளார்.

Luc Montagnier claims Coronavirus man made in Wuhan lab

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவின் வூஹான் நகரில்தான் முதலில் பரவத் தொடங்கியது. இந்த வைரஸை சீனா தான் உருவாக்கியது என அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. கொரோனா வைரஸ் இயற்கையானதா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா என விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி லூக்  மான்டேனியர் (Luc Montagnier) இதற்கு பதில் அளித்துள்ளார்.

எய்ட்ஸ் வைரஸை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளில் ஒருவரான லூக்  மான்டேனியர் ‘கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது’ என தெரிவித்துள்ளார். ‘சீனாவின் வூஹான் நகரிலுள்ள தேசிய பயோ சேப்டி பரிசோதனை கூடத்தில் எய்ட்ஸ்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்த கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம்’ என லூக்  மான்டேனியர்  தெரிவித்துள்ளார். ‘கொரோனா வைரஸில் எச்ஐவி மற்றும் மலேரியா வைரசின் சில மூலக்கூறுகள் உள்ளன.

இது இயற்கையாக வர சாத்தியமில்லை. மேலும் வூஹான் நகரிலுள்ள பரிசோதனை கூடத்தில் கடந்த 2000-ம் ஆண்டு முதலே கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் சில தவறுகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கொரோனா வைரஸ் காட்டு விலங்குகளிடமிருந்து உகான்  சந்தைக்குச் சென்றதாக தான் நம்பவில்லை. இது ஒரு நல்ல புராணக்கதை, அது சாத்தியமற்றது என லூக்  மான்டேனியர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில்’ கூறியுள்ளார்.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது இல்லை என்று வூஹானின் தேசிய பயோ சேப்டி பரிசோதனை கூடத் தலைவர் யுவான் ஜிம்மிங் (Yuan Zhiming) தெரிவித்துள்ளார்.