"மகள் குணமடைந்து இறுதிச்சடங்கை நடத்துவாள்..." 'மறைந்த' பின்னும் 'நம்பிக்கையுடன்' காத்திருக்கும் தாயின் சடலம்...' 'கொரோனா' ஏற்படுத்தும் 'ஆறாத காயங்கள்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 18, 2020 07:52 PM

இங்கிலாந்தில் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் ஜெனிபர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வந்து தனது தாயாரின் இறுதிச் சடங்கை நடத்துவார் என்ற நம்பிக்கையில் அவரது உடலை அவருடைய குடும்பத்தினர் சவபராமரிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

Mother\'s corpse awaiting for daughter\'s arrival

இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ்ஷையர் நகரில் வசித்து வந்தவர் அனுசுயா சந்திரமோகன். இவர், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி அங்குள்ள மருத்தவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலை மோசமாக சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய இங்கிலாந்து அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் ஜெனிபருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள ராயல் பாப்ஒர்த் மருத்தவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனினும், ஜெனிபர் குணமடைந்து தாய்க்கு இறுதி சடங்கு நடத்துவார் என்ற நம்பிக்கையில் அனுசுயாவின் உடலை அவருடைய குடும்பத்தினர் சவ பராமரிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர். ‘ஜெனிபர் குணமடைந்து வரும் வரை அனுசுயாவின் உடலை பத்திரமாக வைத்திருக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறோம்’ என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.