"எல்லாம் ஷூட்டிங்ல பட்டது.. ஒவ்வொரு தழும்புக்கும் ஒரு ஹிஸ்டரி இருக்கு!".. கேப்டனுக்கு கட்டிங், ஷேவிங் செஞ்சு டை அடித்துவிடும் பிரேமலதா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 19, 2020 07:31 PM

ஊரடங்கினால் அத்தியவாசிய பொருட்களை தவிர்த்து வேறு எதற்கான கடைகளும் திறக்கப்படுவதில்லை என்பதால், வீடுகளிலேயே பலரும் தங்களுக்குள் முடி திருத்திக்கொள்கிறார்கள்.

Permalatha does cutting, shaving for DMDK Leader Vijayakanth video

இந்நிலையில், நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துக்கு முடிதிருத்தி , ஷேவ் செய்து, டை அடித்து, நகம் வெட்டிவிட்டுள்ளார் அவரது மனைவி பிரேமலதா. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் விஜயகாந்தின் கால்களில் இருந்த தழும்புகளுக்கு க்ரீம் தடவும்போது பிரேமலதா,  ‘இது எல்லாமே படப்பிடிப்பில் அடிபட்ட தழும்புகள். ஒவ்வொரு தழும்புக்கு பின்னாலும் ஒரு வரலாறே இருக்கிறது’ என்று சொல்லிக்கொண்டே க்ரீம் தடவினார். 

ஒவ்வொன்றையும் பிரேமலதா செய்யும்போது விஜயகாந்த் அவற்றை மெல்லமாக சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்கிறார். எல்லாம் முடிந்தபின், ‘உங்க கேப்டன் இப்ப ஷைன் ஆயிட்டார்’ என்றும் பிரேமலதா கூறுகிறார்.  இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.