'பிஜேபி'யோட எதிர்காலம் 'எப்படி' இருக்க போகுது...? 'அவரு' நினைக்குறதுலாம் 'நடக்க' சான்ஸே இல்ல...! - பிரசாந்த் கிஷோர் கணிப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க காரணமாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர்.
அவர் கோவா அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பேசியபோது, சுதந்திரம் பெற்ற முதல் 40 ஆண்டுகளில் காங்கிரஸ் எப்படி இருந்ததோ அதேபோல வரவிருக்கும் ஆண்டுகளில் பாஜக இருக்கும். இந்திய அளவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுவிட்டால் அக்கட்சியை உடனடியாக அகற்ற வாய்ப்பில்லை.
மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பாஜக எங்கும் போகாது. மோடியை மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என ராகுல் காந்தி நினைக்கிறார். ஆனால், அது நடக்காது.
பாஜகவுடன் நாம் பல ஆண்டுகளுக்குப் போராட வேண்டியதிருக்கும். பாஜக அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், தேசிய அரசியலில் பாஜக மையமாக இருக்கும். மோடியின் வலிமையை அறிந்து கொள்ளாதவரை மோடியின் இடத்துக்கு ராகுல்காந்தியால் வரமுடியாது.
அவரை தோற்கடிக்கவும் முடியாது. அடுத்த பத்தாண்டுகளுக்கு பாஜகவை எதிர்த்து போராட வேண்டியதிருக்கும் என தெரிவித்தார். இந்திய அரசியலில் இன்னும் பல தசாப்தங்களுக்கு வல்லமை மிக்க கட்சியாக பாஜக தொடரும் என தெரிவித்தார்.