‘யாரு சாமி நீ’!.. ‘ஒரு சான்ட்விட்ச் வாங்கவா ஹெலிகாப்டர் எடுத்து வந்தாரு’.. அதிர்ந்துபோன கடைக்காரர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஊரடங்கு சமயத்தில் ஒரு சான்ட்விட்ச் வாங்குவதற்காக ஹெலிகாப்டரில் வந்த நபரின் வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் இன்னும் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், அங்கு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடைந்ததால், சமீபத்தில் பெண் ஒருவர் தனக்கு பிடித்த மெக்டொனால்டு பர்கரை வாங்க 100 கிலோமீட்டர் காரை ஓட்டிச் சென்றார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவவே, ஊரடங்கை மீறியதாக அப்பெண்ணிடம் காவல்துறையினர் அபராதம் வசூலித்தனர்.
இந்த நிலையில் அதே இங்கிலாந்து நாட்டில் தனக்கு பிடித்த சான்ட்விட்சை வாங்க ஹெலிகாப்டரில் நபர் ஒருவர் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சுமார் 130 கிலோமீட்டர் தூரம் ஹெலிகாப்டரில் பறந்து வந்து சான்ட்விட்சை அவர் வாங்கிச் சென்றுள்ளார். ஹெலிகாப்டரில் வாடிக்கையாளர் வந்ததைப் பார்த்து மிரண்டுபோன ஹோட்டல் நிர்வாகம், உடனே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. அதேவேளையில் ஊரடங்கை மீறியதற்காக அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சிலர் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
