“எல்லார் வாழ்க்கையும் நொறுங்கிடுச்சு!”.. ஐந்தாவதாக மெய்க் காப்பாளருடன் திருமணம்! நடிகையை வசைபாடிய முன்னாள் காதலி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sivasankar K | Jan 31, 2021 07:21 PM

கனடாவில் பிரபல நடிகையும் கோடீஸ்வரருமான Pamela Anderson மெய்க்காப்பாளர் தற்போது ஐந்தாவது முறையாக தனது மெய்க் காப்பாளரை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

Just married Pamela Anderson accused of Seducing hubby from his ex

கனடிய - அமெரிக்க நடிகையான Pamela Anderson-ன் சொத்து மதிப்பு 12 டாலர்ஸ் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் 52 வயதான பமீலா ஆண்டர்சன் தனது மெய்க்காப்பாளராக இருந்த Dan Hayhurst-ஐ மணந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், சொந்தங்கள் மட்டும் கலந்துகொள்ள கனடாவின் வான்கூவர் தீவில் இந்த திருமணம் நடந்திருக்கிறது. 52 வயதான Pamela Anderson-ன் 5-வது திருமணம் தான் இது என்னும் நிலையில் இவருடைய முதல் திருமணம் இசைக்கலைஞர் டாமி லீ என்பவருடன் நடந்தது. ப்ராண்டன் மற்றும் டைலன் ஆகிய 2 மகன்கள் இந்த தம்பதியருக்கு உள்ளனர்.

டாமி லீயை சந்தித்த நான்கு நாட்களில் Pamela Anderson அவரை திருமணம் செய்துகொண்டதால், அந்த சமயம் இந்த விஷயம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது Pamela Anderson திருமணம் செய்திருப்பதற்கு  அவருடைய மகன்கள் இருவரும் இந்த திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: அம்மா வீட்டுக்கு போன மனைவி!.. ‘இதான் சமயம் என்று கணவர் செய்த பலே காரியம்!'.. நியாயம் கேட்டதற்கு ‘சாதியை வைத்து தகாத பேச்சு!’.. ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

இதனிடையே Dan Hayhurst-ன் 42 வயது முன்னாள் காதலியான Carey தங்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் தங்களின் 5 வருட வாழ்க்கையை முறித்து தன் காதலரை Pamela Anderson மயக்கி, வளைத்துப் போட்டுவிட்டதாகவும், இதனால் இதில் சம்மந்தப்பட்ட அனைவருமே நொறுங்கிப் போயுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Just married Pamela Anderson accused of Seducing hubby from his ex | World News.