'கால், தலை தெரியுது ஆள காணோம்?'.. பேய் வாக்கிங் போகுதா? .. நள்ளிரவில் CCTV-யில் பதிவான ‘மிரள வைக்கும்’ காட்சி! #VIRALVIDEO
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிசிடிவி தொழில்நுட்பம் வந்தபிறகு நிறைய விஷயங்களை கண்டுபிடிக்க உதவிகரமாய் அது இருந்தது. அதே போல் என்னவென்றே தெரியாத மர்மங்கள் அடங்கிய நிகழ்வும் சிசிடிவிகளில் பதிவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பல மாதங்களுக்கு முன்னர்தான், அந்தியூரில் பத்ரகாளி அம்மன் கோயிலில் பெண் உருவம் போன்றதொரு ஒளி ஊஞ்சலில் ஆடுவது போலானதொரு வீடியோ சிசிடிவி காட்சிகளாக வெளியானது. இதேபோல், மிக அண்மையில் ஆந்திராவில் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப்பேருந்து சற்று தூரம் முன்னே நகர்ந்து தூண்கள் மீது மோதிய வீடியோ சிசிடிவி மூலம் வெளியானது.
இப்படித்தான் தற்போது யுகே பகுதியில் எங்கே என்று குறிப்பிடப் படாத நிலையில், டிரான்ஸ்பேரண்ட்டான உருவம் ஒன்று நடந்து செல்வது சிசிடிவியில் பதிவாகி அந்த வீடியோ வைரலாகிவருகிறது. பயமுறுத்தும் அந்த உருவம் நள்ளிரவில் தெருவில் சுற்றித் திரிந்தபோது, ஷூ அணிந்த அந்த கால்களும், தலைப்பகுதியும் மட்டுமே தெரிகிறது. ஆனால் கால் பகுதிக்கு அந்த பக்கம் இருக்கும் காட்சிகள் நன்றாகவே தெரிகின்றன. கால், உடம்பின் பகுதிகள் தெரியவே இல்லை. அவை மெல்லிய காற்றில் மறைந்து போனதாகத் தோன்றியது.
CCTV captures ghostly figure walking the streets in the middle of the night pic.twitter.com/0BqAcwAAn1
— The Sun (@TheSun) January 23, 2021
மற்றபடி நடந்து செல்லும் அந்த உருவம் ஒரு ஆண் போலவே, கோர்ட் சூட்டுடன் நடந்து போவதாக தெரிகிறது. “ஆனால் இது ஒரு பேய் அல்ல. இது ஒரு பேய் போன்ற ஒரு கிராபிக்கல் யதார்த்த நிகழ்வு. இது பெரும்பாலும் சிசிடிவி கருவிகளில் நிகழ்வதுண்டு. சிசிடிவியில் இருக்கும் சில ரெக்கார்டு டேப் தரவுகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, இப்படியான விஷயங்கள் தோன்றக்கூடும்.
சில நேரங்களில் நிஜ பிம்பத்தையும், பின்னணியில் இருக்கும் பிம்பத்தையும் பிரித்து ஷேடோவாக காட்டும்போது இந்த தோற்றம் உண்டாகும்” என்று இந்த வீடியோவை பார்ப்பவர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
