VIDEO: "உங்கள மாதிரியா இருக்கேன்னு சித்ராவிடமே கேட்டேன்!".. சித்ரா கேரக்டருக்கு மாற்றாக நடிக்கிறாரா கீர்த்தனா? யார் இவர்? EXCLUSIVE INTERVIEW!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அண்மையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் மறைவு தமிழகத்தையும் தென்னிந்திய திரையுலகத்தையும் உலுக்கியது. ஒருபுறம் சித்ராவின் மரணம் குறித்த வழக்கினை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், என்ஜினியர், நடனக்கலைஞர், சித்ராவை போலவே, ரியாலிட்டி டான்ஸ் ஷோவின் முதல் சீசனில் சித்ரா ஆடியதைத் தொடர்ந்து இரண்டாவது சீசனில் ஆடியிருந்தவருமான கீர்த்தனா, உருவத்தில் சித்ராவை போலிருப்பதாகவும், சித்ரா நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரமான முல்லை கேரக்டருக்கு மாற்று என்றும் சொல்லப்படுவது குறித்த சர்ச்சைகளுக்கு அவர் அளித்த நேர்காணல் பதில்கள்:
“ரியாலிட்டி ஷோவில் சித்ராவுடன் அறிமுகமாகியிருந்தேன். அவருடைய தற்கொலையை முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. எல்லாரும் சொல்வது போல, சித்ராவின் முக சாயலோடு என் முக அமைப்பு ஒத்துப் போவதாக நான் கருதவில்லை. நான் அப்படி உணர்ந்ததில்லை. ஒரு நாள் சித்ராவிடமே கேட்டேன். “சித்து நான் உங்கள மாதிரியே இருக்கேன்னு எல்லாரும் சொல்றாங்களே.. நாம அப்படியா இருக்கோம்?” என கேட்டிருக்கேன்.
ஆனால் சித்ராவின் மறைவுக்கு பின்னர் யூடியூப் சேனல்களில் “இவருக்கு பதில் இவர்” என என் புகைப்படங்களை சித்ராவுடன் ஒப்பிட்டு பதிவிட்டு வந்தார்கள். ஆனா நான் அவருடைய கேரக்டரில் நடிக்கவில்லை. சேனல்களில் இருந்து என்னை யாரும் அழைக்கவும் இல்லை. நானும் வாய்ப்புக்காக அந்த போட்டோஷுட் செய்யவில்லை. சில மேக்கப் ஆர்ட்டிஸ்டுகள் என்னை அணுகியதாலும், சித்ராவின் மறைவு ஏற்படுத்திய தாக்கத்தினாலும், சித்ராவின் நினைவலைகளுக்காக சித்ரா போல் உடை, ஒப்பனைகளுடன் போட்டோ ஷூட் செய்தோம். விஜய் டிவியை சேர்ந்தவர்கள் யாரையும் நான் டேக் செய்யவும் இல்லை.
ஆனால், “வாய்ப்பு வேணும்னா வேற விதமா பண்ணு. வாய்ப்பு தேடுவதற்காக இப்படி பண்றியா?” என கேட்டார்கள், “இவருக்கு பதில் இவர், சற்று முன் புதிய சித்து கண்டுபிடிப்பு” என்றெல்லாம் சேனல்களில் வரத் தொடங்கின. ஆனால் நான் அந்த போட்டோஷூட் செய்வதற்கு முன்பாகவே இதுதான் எனது ஃபர்ஸ்ட் & லாஸ்ட் போட்டோ ஷூட், அதன் பிறகு கண்டிப்பாக நான் என் வேலையை பார்க்க போய்விடுவேன் என்பதில் உறுதியாய் இருந்தேன். நான் எனக்கு வந்த டிவி விளம்பரம் சிறிய வாய்ப்புகளை செய்து வருகிறேன்.
அவரை போலவே இருப்பதாக நிறைய பேர் சொன்னதால், எனக்கே ஆரம்பத்தில் கஷ்டமா இருந்தது. ஆனால் தற்போது அவருடைய இறப்புக்கு பின், என் மூலமாக சித்ராவை பார்ப்பதாகவும் என்னிடம் பேசும்போது ஆறுதலாகவும் இருந்ததாக சொல்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனினும் எனக்கு தெரியவில்லை. மக்கள் தான் அதை சொல்லணும். ஆனால் சித்ராவின் கதாபாத்திரமான முல்லைக்கு நான் மாற்று கிடையாது.!

மற்ற செய்திகள்
