பாட்டிலில் 'எடுத்து' வரப்பட்ட ஆதாரம்... ஊட்டிக்கு 'படையெடுத்த' வெட்டுக்கிளிகள்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவுக்கு அடுத்தபடியாக வெட்டுக்கிளிகள் தாக்குதலால் இந்திய விவசாயிகள் திணற ஆரம்பித்து இருக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரசதேசம் உள்ளிட்ட வடக்கு மாநிலங்கள் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் திணற ஆரம்பித்து இருக்கின்றன. இவை தமிழகத்துக்கும் வந்து தாக்குதல் நடத்தலாம் என்பதால் விவசாயிகள் அச்சப்பட ஆரம்பித்து இருக்கின்றனர். இதற்கிடையில் ஊட்டிக்கு படை வெட்டுக்கிளிகள் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
உச்சகட்டமாக இவற்றை ஒருவர் பாட்டிலில் அடைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கே எடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து பூச்சியியல் ஆய்வாளர் ஒருவர், ''தென்னிந்தியாவுக்கு இதுவரை படை வெட்டுக்கிளிகள் வந்தது இல்லை. பச்சை மற்றும் பழுப்பு நிற வெட்டுக்கிளிகள் சாதாரணமாக இங்கே காணப்படுபவை. அதனால் நமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இவற்றின் இனப்பெருக்கமும் கட்டுக்குள் உள்ளது,'' என தெரிவித்து இருக்கிறார்.
மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இதுகுறித்து கூறுகையில், ''ஊட்டி காந்தள் பகுதியில் படை வெட்டுக்கிளிகள் வந்ததாக மக்கள் கூறினர். வெட்டுக்கிளி ஒன்றையும் கொண்டுவந்தனர். அதை ஆய்வுக்காக வேளாண் பல்கலைக்கழத்திற்கு அனுப்பியுள்ளோம். முதல் கட்ட ஆய்வில் படை வெட்டுக்கிளி இல்லை எனத் தெரியவந்துள்ளது. பல்கலைக்கழகத்திலிருந்து பூச்சியியல் ஆய்வாளர்கள் வந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்,''என்றார்.