'127 பேரிடம்' நடத்தப்பட்ட 'சோதனையில் வெற்றி...' 'ஆரம்ப கட்ட' நோயாளிகளை 'குணப்படுத்தி விடலாம்...' 'ஹாங்காங் விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 09, 2020 11:44 PM

கொரோனா நோய்க்கு எதிராக 3 மருந்துகள் அடங்கிய புதிய ஆன்டிவைரல் மருந்து கலவையை ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

New antiviral containing 3 drugs against coronavirus

ஹாங்காங்கில் உள்ள ஆறு பொது மருத்துவமனைகளில் நோய் பாதிக்கப்பட்ட 127 பெரியவர்களுக்கு புதிய ஆன்டிவைரல் மருந்து கலவை கொடுத்து சோதனை நடத்தப்பட்டது.

மூன்று மருந்துகளின் கலவை 7 நாட்களுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டது. சிகிச்சை தொடங்கிய ஏழு நாட்களுக்குள் நாசித் துவாரத்தில் வைரஸ் தொற்று இல்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

'இன்டர்ஃபெரான் பீட்டா -1 பி' மற்றும் 'லோபினாவிர்-ரிடோனாவிர்' மற்றும் 'ரிபாவிரின்' ஆகிய மருந்துகளின் கலவையை உள்ளடக்கிய இந்த மருந்து சிறந்த பலனை கொடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இது லேசான மற்றும் மிதமான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே சிறந்தது.

மோசமான நோயாளிகளில் இந்த மூன்று கலவையின் செயல்திறனை ஆராய பெரிய கட்ட 3 சோதனைகள் அவசியம் என்பதை ஆராய்ச்சியாளர்கள்  வலியுறுத்தி உள்ளனர்.

இன்ஃப்ளூயன்ஸா குறித்த முந்தைய ஆய்வுகளின் அடிப்படையில், பல வைரஸ் தடுப்பு மருந்துகளின் கலவையுடன் சிகிச்சையளிப்பது ஒற்றை மருந்து சிகிச்சையை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த சிகிச்சை முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு அறிக்கை தி லான்செட் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.