தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட் : 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 09, 2020 07:23 PM

தமிழகத்தில் இன்று(09-05-2020) மட்டும் சுமார் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

tn-coronavirus-covid19-updates-and-statistics-as-on-may-09

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 526 பேரில் 360 ஆண்களும், 166 பெண்களும் என்ற எண்ணிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அதிகப்படியாக இன்று மட்டும் 219 பேர் உடல் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் இதில் அதிகபட்சமாக தலைநகரான சென்னையில் 279 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக சென்னையில் மட்டும் சுமார் 2757 பாதிப்படைந்துள்ளாதாகவும் அறிவித்துள்ளனர்.

இன்று பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வெளிவந்த எண்ணிக்கையை காட்டிலும் சிறிது குறைந்துள்ளது எனலாம்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6535 ஆகஉயர்ந்துள்ளது. இவர்களில் தற்போது 4664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1824 நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை 44 ஆக உள்ளது.

இன்று(09-05-2020) வரை  கொரோனா தொற்று பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 2,29,670 ஆகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்தவர்களில் 1867 பேர் கோயம்பேடு மார்க்கெட் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #CORONA