‘திருடன் திருடன் எனக் கத்திய இந்திய ரசிகர்கள்..’ மல்லையா வந்ததால் மேட்சில் பரபரப்பு..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jun 10, 2019 02:52 PM

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் அபாரமாக விளையாடி இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது. 

Indian fans call Vijay Mallaya thief during INDvsAUS match

லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் நேற்று மோதின. அப்போது போட்டியைக் காண அங்கு விஜய் மல்லையா வந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மல்லையாவிடம் வங்கிக் கடன் மோசடி வழக்கில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படும் வழக்கு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் தாம் அங்கு ஆட்டத்தைக் காண வந்திருப்பதாக முறைத்தபடி கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆட்டம் முடிந்து வெளியே வந்த மல்லையாவைப் பார்த்து இந்திய ரசிகர்கள் திருடன், திருடன் என முழக்கமிட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

போட்டி முடிந்த பின் மல்லையா பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “எனது மகனுடன் ஆட்டத்தைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்ற கோலிக்கும் அவரது அணியினருக்கும் வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #VIJAYMALLYA #INDVSAUS