எலான் மஸ்க்-கு மெசேஜ் அனுப்பிய இந்திய மாணவர்.. 2 நிமிடத்தில் வந்த ரிப்ளை..என்ன சொல்லிருக்காரு பாருங்க..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். அதன் மூலமாகத்தான் மஸ்கிடம் நண்பராகி உள்ளார் இந்தியாவை சேர்ந்த இளம் பொறியாளர் ஒருவர்.
எலான் மஸ்க்
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், உலக பணக்காரர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர் ஒருவர் டிவிட்டரில் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். எதிர்பாராத விதமாக அடுத்த இரண்டு நிமிடங்களில் மாணவரின் மெசேஜிற்கு பதில் அனுப்பி இருக்கிறார் மஸ்க்.
அந்த மெசேஜில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களில் உள்ள விண்ட்ஷீல்டில் ஏற்படும் சிரமத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார் இந்திய மாணவரான பிரணாய் போதால். அதற்கு," அடுத்த ரிலீஸில் அது சரிசெய்யப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார் எலான் மஸ்க்.
கேள்வி - பதில்
அதனை தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்து பிரணாய் டிவிட்டர் வாயிலாக மஸ்கிடம் கேள்வி எழுப்பவும் தன்னுடைய கருத்துக்களை கூறவும் செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் மஸ்க் அதற்கு பதிலும் அளித்திருக்கிறார்.
தற்போது டாடா குழுமத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பர் ஆக பணிபுரிந்து வரும் பிரணாய் இதுபற்றி பேசுகையில்,"எலான் எனக்கு முதன்முதலில் பதில் அனுப்பியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் ஆகும். அதன்பிறகு தொடர்ந்து நாங்கள் டிவிட்டர் வழியாக உரையாடி வருகிறோம்" என்றார்.
நண்பர்கள்
தன்னுடைய செல்வாக்கு, அந்தஸ்து குறித்தெல்லாம் எலான் பெருமைப்படுபவர் இல்லை எனவும் அனைவருடன் சகஜமாக பழகும் குணம் கொண்டவர் எனவும் பிரணாய் தெரிவித்தார். இதுகுறித்து பேசுகையில்," மஸ்கிடம் பேசும் போது உலகத்தின் பணக்காரர்களில் ஒருவருடன் பேசிக்கொண்டுள்ளோம் என்ற எண்ணமே வருவதில்லை. மாறாக நம்முடைய நல்ல நண்பர் ஒருவருடன் பேசுவதை போலவே தோன்றும்" என்கிறார் பிரணாய்.
செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் திட்டம், பல்வேறு கிரக அமைப்புகள் பற்றியும் எலான் மஸ்குடன் விவாதித்து வரும் இந்த இளம் பொறியாளர் பிரணாய்-க்கு எதிர்காலத்தில் அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்துவிட்டு எலான் மஸ்கின் நிறுவனத்தில் பணிபுரியவேண்டும் என்பதே விருப்பமாம்.