ROYAL ENFIELD பைக்கை இப்படிதான் திருடுனேன்.. வெறும் 30 செகண்ட்டில் செஞ்சி காட்டிய ‘பலே’ திருடன்.. மிரண்டு போன போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாராயல் என்பீல்டு பைக்கின் பூட்டை 30 செகண்ட்டில் உடைக்கும் திருடனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் இளைஞர்கள் பெரிதும் விரும்பும் பைக்குகளில் ஒன்றாக ராயல் என்பீல்டு பைக் இருந்து வருகிறது. இந்த பைக்குகளை விரும்பாத இளைஞர்கள் குறைவு என்றே சொல்ல வேண்டும். தற்போது சந்தையில் அதிநவீன பைக்குகள் வரவுகள் இருந்தாலும் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு இளைஞர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உள்ளது. அதிலும் ராயல் என்பீல்டு க்ளாசிக் மாடல் பைக்குகள் இளைஞர்களின் பேவரைட் லிஸ்ட்டில் நிச்சயம் இடம்பெறும்.
அப்படி உள்ள சூழலில், தற்போது விலை உயர்ந்த பைக்குகளை குறி வைத்து திருடும் கும்பல் அதிகமாகியுள்ளது. இரவு வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகளை மர்ம நபர்கள் எளிதாக பூட்டை உடைத்து திருடுச் செல்கின்றனர். அந்த வகையில், ராயல் என்பீல்டு பைக்கின் பூட்டை சில நொடிகளில் உடைக்கும் திருடனின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் மோரினா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஷ்யாம் குர்ஜார் மற்றும் பஜ்னா குராஜ். இவர்கள் இருவரும் விலை உயர்ந்த பைக்குகளை திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். இந்த சூழலில் சமீபத்தில் இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அப்போது ராயல் என்பீல்டு பைக்கை திருடியது எப்படி என செய்து காட்டுமாறு போலீசார் கூறினர். அப்போது இளைஞர்களில் ஒருவர், வேகமாக பைக்கின் சைடு லாக்கை உடைத்து, சாவிக்கு செல்லும் இணைப்பை துண்டித்து, வெறும் 30 செகண்ட்டில் பைக்கை ஸ்டார்ட் செய்தார். இதைப் பார்த்து போலீசாரே மிரண்டு போயினர்.
#WatchVideo: Police arrested two youths who broke a 'highly protected' Royal Enfield bike's lock in just 20 second in #Gwalior. pic.twitter.com/9SUtmTh4dC
— Free Press Journal (@fpjindia) March 14, 2022
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு சந்தையில் அதிக விலை கிடைப்பதால் அந்த பைக்குகளை குறிவைத்து திருடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் திருடிய 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இளைஞர்கள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.