வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட எலான் மஸ்க்-கிரிம்ஸ் தம்பதி?.. பெயர் இதுதானா..? திடீரென பரவும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கிற்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்-கிரிம்ஸ் தம்பதி, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அமெரிக்க வார இதழான ‘People’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கிரிம்ஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது இருவரும் பெண் குழந்தைக்கு பெற்றோராகி உள்ளனர். அந்த குழந்தைக்கு ‘Exa Dark Sideral’ என பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தங்கள் மகளை ‘Y’ என செல்லமாக இருவரும் அழைத்து வருவதாக கிரிம்ஸ் தெரிவித்துள்ளார். முதலில் தங்கள் மகளுக்கு வேறு பெயர் வைக்கவே இருவரும் விரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நிறைய குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புவதாகவும் கிரிம்ஸ் தெரிவித்துள்ளார். மூன்று முதல் நான்கு குழந்தைகள் வரை தங்களுக்கு வேண்டுமென விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்-கிரிம்ஸ் தம்பதிக்கு ஆண் ஏற்கனவே ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
