‘வீட்லயே இருக்குறவங்களுக்கு சரி.. இவங்களுக்குலாம் எப்படி உதவுறது?’.. ‘சென்னை மாநகராட்சியுடன் நீங்களும் இணையலாம்!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 24, 2020 12:19 PM

கொரோனாவுக்கு எதிராக போராட சென்னை மாநகராட்சிக்கு  உதவ நினைப்பவர்கள் அரிசி, பருப்பு உள்ளிட்ட நீண்ட நாட்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்களை கொடுக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Coronavirus: help helpless people chennai municipal commissioner

கொரோனா பரவுவதலை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகளின்றி வசித்து வரும் ஆதரவற்றோர்கள் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை அளிப்பதற்கான முயற்சிகள் சென்னை மாநகரட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இவர்களுக்கு உதவ நினைக்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என யாராக இருந்தாலும் தங்களால் இயன்ற உதவிகளை சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து நேரடியாக செய்யலாம் என்றும் கட்டுப்பாட்டு அறை எண் 1913 என்கிற எண்ணுக்கோ அல்லது 044-25384520 என்கிற எண்ணுக்கோ தொடர்புகொண்டு உதவி செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிர அரிசி, பருப்பு, எண்ணெய், பால் பவுடர், சாம்பார் மற்றும் ரசப்பொடி, நாப்கின் பொடி, கோதுமை மாவு, சோப்பு போன்றவற்றை கூட கொடுத்து உதவலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #CORONAVIRUSOUTBREAKINDIA