'பாண்டியா' பராக் ... ஃபயர் மோடில் மிரட்டும் பாண்டியா... 'ஒரு' நிமிடம் தலை சுற்றி நின்ற எதிரணி !
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி.ஒய். பாட்டீல் தொடரில் கடைசி போட்டியில் சதமடித்திருந்த ஹர்திக் பாண்டியா, இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, முதுகில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் கடந்த ஐந்து மாதங்களாக ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் டாக்டர் டி.ஒய். பாட்டீல் டி 20 கோப்பை தொடரில் ரிலையன்ஸ் 1 அணிக்காக ஆடி வருகிறார். முன்னதாக சிஏஜி அணியை எதிர்த்து ஆடிய போது 39 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். பேட்டிங் மட்டுமல்லாது பவுலிங்கிலும் கலக்கிய ஹர்திக் பாண்டியா ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பிபிசிஎல் அணியை எதிர்த்து ரிலையன்ஸ்-1 அணி ஆடியது. இந்த போட்டியிலும் பந்துகளை நாலாபுறமும் சிக்ஸருக்கு பறக்க விட்ட ஹர்திக் பாண்டியா 55 பந்துகளில் 20 சிக்ஸர்களுடன் 158 ரன்கள் குவித்து அசத்தினார். ஐ.பி.எல் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் வீரரான ஹர்திக் பாண்டியா உச்சகட்ட பார்மில் இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
