‘ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்’... ‘சறுக்கிய இந்திய வீரர்கள்’... ‘டாப் 10 பவுலர்களில்’... ‘ஒரே ஒரு முன்னணி இந்திய வீரர்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Feb 26, 2020 08:19 PM

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் மோசமாக விளையாடியதால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சறுக்கி உள்ளனர்.

Virat kohli loses his First Place After NZ test Match

சர்வதேச டெஸ்ட் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்சில் 1 ரன்னிலும் 2-வது இன்னிங்சில் 19 ரன்கள் எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 5 புள்ளிகளை இழந்து  911 புள்ளிகளிலிருந்து 906 புள்ளிகளுக்கு விராட் கோலி சரிவடைந்தார்.  911 புள்ளிகளுடன் ஸ்டீவன் ஸ்மித் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார். நீண்ட நாட்களாக தொடர்ந்து முதல் இடத்தில் இருந்த விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

முதல் பத்து இடங்களில் இந்திய வீரர்கள் ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால் ஆகியோர் முறையே 8, 9, 10 இடங்களை பிடித்துள்ளனர். இதேபோல் பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும் தான் இடம்பிடித்துள்ளார். அஸ்வின் 765 புள்ளிகளுடன் 9 இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா 756 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளார்.