'இது ஒரு விவாகரத்துன்னு மட்டும் கடந்து போக முடியாது...' 'பெரிய தாக்கத்தை உண்டுபண்ண கூடிய பல விஷயங்கள் இருக்கு...! பில்கேட்ஸ் - மெலிண்டா விவாகரத்து குறித்த வியப்பூட்டும் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் பணக்கார தொழிலாதிபர்களில் ஒருவரான பில்கேட்ஸ் மற்றும் அவரின் மனைவி மெலிண்டா விவாகரத்து முடிவடைந்த சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது எனலாம்.
உலகின் பணக்கார நபர்களின் பட்டியலில் பல ஆண்டுகள் முதலிடத்தை தக்கவைத்து கொண்டிருந்தவர் பில்கேட்ஸ். பணக்காரர் என்ற பெயர் மட்டுமில்லாமல், அவரின் கேட்ஸ் பௌன்டேஷன் ஏழை எளிய மக்களுக்கு, மருத்துவ துறையிலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இலவச சேவை வழங்கி புகழ் பெற்று வருகிறார்.
இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இணைந்து நடத்தி வரும் பில் அண்ட் மெலிண்டா ஃபவுண்டேஷன், உலக அளவில் மிகவும் கொடிய நோய்களுக்கு சிகிச்சை தர உதவும் திட்டங்களுக்கும் தடுப்பூசி திட்டங்களுக்கும் நிதியுதவி செய்து அறப்பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் பில்கேட்ஸ் மற்றும் அவரின் மனைவி மெலிண்டா 27 ஆண்டுகளின் திருமண வாழ்க்கையின் விவாகரத்து முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், உலக அரங்கில் இவர்களின் இந்த பிரிவு பொருளாதார அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. ஏனென்றால் இருவரும் சேர்ந்து தான் உலகின் மிக பெரிய தனியார் அடித்தளத்தை உருவாக்கினர். மேலும் அவர்களின் பெரும் பகுதி செல்வம் பல அறக்கட்டளைகளுக்கும், இவர்களின் கேட்ஸ் பௌன்டேஷனுக்கும் அளிக்கப்பட்டு வந்தது.
பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஜோடி அமெரிக்காவின் மிகப்பெரிய நில உரிமையாளர்களில் ஒருவராகவும் இருந்தனர். அதோடு, வாஷிங்டனின் மதீனாவில் 66,000 சதுர அடி மாளிகை உட்பட வீடுகளைக் கொண்டுள்ளது.
'விவகாரத்தில் இருவருக்கும் 50-50 சொத்து மதிப்பு பிரிக்கப்படுவது கட்டாயம் அல்ல', என மெக்கின்லி இர்வின் நிறுவனத்துடன் வாஷிங்டனில் உள்ள ஒரு குடும்ப வழக்கறிஞரான ஜேனட் ஜார்ஜ் கூறியுள்ளார். மேலும், 'நீதிமன்றங்கள் நியாயமான மற்றும் சமமானவற்றைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பிரித்து வழங்க முடியும்.' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விவாகரத்தின் முடிவில் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா, ஆகியோரின் சொத்து பிரிவின் விவரங்கள் ஒருபோதும் பகிரங்கமாக வெளியிடப்படாது, ஏனெனில் அவை தம்பதியினரின் தனிப்பட்ட ஒப்பந்தங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கக்கூடும் என்று ஜார்ஜ் கூறியுள்ளார்.