'பி.எஃப் பணத்தை அரசே செலுத்தும்...' 'அரசின் சார்பிலும், நிறுவனத்தின் சார்பிலும் செலுத்த முடிவு...' 'நிபந்தனை' - '100 ஊழிர்களுக்கு' குறைவாக இருக்க 'வேண்டும்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 27, 2020 09:58 AM

குறிப்பிட்ட வருவாய் ஈட்டுவோருக்கு அடுத்த 3 மாதங்களுக்கு அரசே பிஎஃப் பணத்தை செலுத்தும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

government will pay PF money for the next 3 months

கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திக்கக்கூடாது என மத்திய அரசு இன்று சில பொருளாதார திட்டங்களை அறிவித்தது.

இதன் அடிப்படையில் EPF எனப்படும் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதித் தொகையை ஊழியர் சார்பாகவும், நிறுவனத்தின் சார்பாகவும் அரசே செலுத்துவிடுவதாக அறிவித்துள்ளது. இரு தரப்பின் சார்பிலும் தலா 12 சதவிகிதத்தை அரசே செலுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு குறிப்பிட்ட அந்த நிறுவனம் 100 ஊழியர்களுக்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்டிருக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே ஊழியர்களின் சார்பாகவும் நிறுவனத்தின் சார்பாகவும் அரசே அடுத்த மூன்று மாதங்களுக்கான தொழிலாளர் வைப்பு நிதி பணத்தை செலுத்த உள்ளது.

Tags : #CORONA #PF #PROVIDENT FUND #FINANCE MINISTER #NIRMALASEETHARAMAN