‘வாசனை, சுவை ரெண்டையும் இழந்த மாதிரி இருக்கு’.. பிரபல அமெரிக்க பாடகருக்கு கொரோனா தொற்று உறுதி..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரபல அமெரிக்க பாடகரும், நடிகருமான ஆரோனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனா, இத்தாலி, ஈரானுக்கு அடுத்து அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதலால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க பாடகரும், நடிகருமான ஆரோனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
அதில், ‘எல்லோருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த மார்ச் 15ம் தேதி முதல் நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு மிகவும் லேசான அறிகுறிகளே தென்பட்டுள்ளன. காய்ச்சல் இல்லை. ஆனால் சளி இருக்கிறது.பலருக்கு தீவிரமான அறிகுறிகள் ஏற்படுவதாக அறிகிறேன். இது மிகவும் ஆபத்தான வைரஸ். வாசனைத் திறன் மற்றும் சுவையை இழந்துவிட்டதாக உணர்கிறேன். இந்த சூழலை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டேன். இந்த வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.
