'காதல்ங்குற பேச்சுக்கே இடம் இல்ல.. சாப்பாடே இதுதான்!'...வடகொரியாவில் நடக்கும் கொடூரங்கள்.. தப்பிவந்த இளம்பெண் கூறும் திடுக்கிடும் தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னின் ஆட்சியின் கீழ் அப்பாவி மக்கள் படும் இன்னல்களை அங்கிருந்து வெளியேறி வெளிநாட்டில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் அம்பலப்படுத்தி பேசியுள்ளார்.

அன்றாடம் வடகொரியாவில் கூலி வேலை செய்து பிழைக்கும் பெரும்பான்மை மக்கள் சத்தான உணவுகளுக்காக பூச்சிகளை சாப்பிட்டு வரும் அவலத்தை 26 வயதான Yeonmi Park அம்பலப்படுத்தியுள்ளார். வட கொரியாவில் இருந்து தனது 13 வயதில் வெளியேறும் வரை தாமும் பூச்சிகளை உணவாக உட்கொண்டதாக கூறும் Yeonmi Park தெருக்களில், கேட்பாரற்ற சடலங்கள் கிடப்பதையும் அந்த சிறுவயதில் காண முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசியவர், பாடசாலைகளில் நட்பு அல்லது காதல் என்பதையே காண முடியாது என்றும் மின்சாரம் கூட வடகொரியாவில் பொது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வின்படி மொத்த மக்கள் தொகையில் 43% பேர் தான் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு அருந்துபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிம் ஜாங் உன் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவில் அணுஆயுதம் தயாரிப்பதற்கு முனைப்பு காட்டுவதையும் Yeonmi Park அம்பலப்படுத்தியுள்ளார்.
தனது தாயாருடன் 2007 ஆம் ஆண்டு வட கொரியாவில் இருந்து சீனர் ஒருவரின் மூலம் வெளியேறியதாகவும், ஆனால் அந்த சீன நபர் தன்னையும் தனது தாயாரையும் இன்னொருவனுக்கு விற்றுவிட்டதாகவும், அந்த கும்பல் தனது தாயை பாலியல் தொழிலுக்குள் தள்ளியதாகவும், ஒருவழியாக பிறகு அங்கிருந்து தப்பி மங்கோலியா சென்று கோபி பாலைவனத்தை கடந்து தென்கொரியாவில் சகோதரியுடன் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
