'எதே... நான் கோமா'ல இருக்கனா'?.. 'திடீர்' என அதிபர் கிம் தோன்றியதால்.. வட கொரியாவில் பரபரப்பு!.. அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Aug 27, 2020 01:10 PM

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒரு சூறாவளியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு தயார் நிலையில் இருக்குமாறு கிம் ஜாங்-உன் வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

north korea kim jong un appears in meeting after coma rumor corona

வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் தீவிர மன அழுத்தம் காரணமாக தன்னுடைய பொறுப்புகள் சிலவற்றை சகோதரியிடம் ஒப்படைத்துள்ளதாக செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து தென் கொரியாவின் மறைந்த ஜனாதிபதி கிம் டே ஜாங்-இன் முன்னாள் உதவியாளரான ஜாங் சாங் மின், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருக்கிறார். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாரா என்பது குறித்து உறுதியாக கூற முடியவில்லை என்று கூறினார்.

இதையடுத்து, தற்போது அவர் இறந்திருக்கலாம் என்ற ஊகங்கள் மீண்டும் எழுந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இப்படி தான் பொது வெளியில் கிம் ஜாங் உன் தென்படாததால், அவர் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில், ஒரு கட்சி கூட்டத்தில் திடீர் என தோன்றிய  கிம் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒரு சூறாவளியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு தயார் நிலையில் இருக்குமாறு  கிம் ஜாங் உன் வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவை எதிர்கொள்ளும் வட கொரியாவின் நடவடிக்கையில் குறைபாடு இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுவரை, ஒரு கொரோனா வழக்கு கூட தங்கள் நாட்டில் பதிவாகவில்லை என வட கொரியா கூறிவருகிறது. இருப்பினும், இது கண்காணிப்பாளர்களால் சந்தேகிக்கப்படுகிறது.

நாட்டில் நோய்த்தொற்றுகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் நீண்ட காலமாக வலியுறுத்தினாலும், அரசு ஊடகங்கள் பல வாரங்களாக அதுபோன்ற செய்தியை மீண்டும் வெளியிடவில்லை.

ஏற்கனவே வறுமையில் வாடும் வட கொரியாவில் வைரஸின் பெரிய பரவல் பேரழிவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில், 'பவி' சூறாவளி இந்த வார இறுதியில் நாட்டைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் 'பவி' சூறாவளி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கிம் ஜாங் உன், வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

செவ்வாயன்று நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய கிம், வீரியம் மிக்க வைரஸ் குறித்த நாட்டின் அணுகுமுறையில் சில குறைபாடுகள் இருந்ததாக ஒப்புக் கொண்டார். ஆனால் குறைபாடுகள் குறித்த எந்த விவரமும் வழங்கவில்லை என அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. North korea kim jong un appears in meeting after coma rumor corona | World News.