வட கொரியாவில் பரபரப்பு!.. ஆட்சி அதிகாரம் கைமாறுகிறது!?.. அதிபர் கிம்-க்கு என்ன நடந்தது?.. வெளியான 'பகீர்' தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்வட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன் ஆட்சி அதிகாரத்தை தனது தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மன அழுத்ததில் இருப்பதால், அதை சமாளிக்கும் வகையில் தன் சகோதரிக்கு தேவையான அதிகாரத்தை ஒப்படைத்துள்ளதாக உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. வடகொரியாவின் சர்வாதிகாரி என்றழைக்கப்படும் கிம் ஜாங் உன், கடந்த சில மாதங்களுக்கு பின்பு பொதுவெளியில் தென்படாததால், அவர் இறந்துவிட்டார் என்றும், அவருடைய சகோதரியான Kim Yo Jong தான் இனி வடகொரியாவை ஆட்டிப் படைக்க போவதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் அதன் பின், கிம் பொது வெளியில் தோன்றி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனினும், கிம் உடல் அளவில் ஏதோ பிரச்சனையை சந்தித்து வருகிறார் என்பது மட்டும், அவருடைய சமீபத்திய கூட்டங்களின் உரையாடலின் போது தெரிந்தது. இந்நிலையில், ஏற்கனவே தென் கொரியா மற்றும் அமெரிக்காவிற்கான கொள்கையின் பொறுப்பில் இருக்கும் தன்னுடைய சகோதரி Kim Yo Jong-க்கு, கிம் ஜாங் உன் தேவையான அதிகாரத்தை கொடுத்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம், அவர் மன அழுத்ததில் இருப்பதால் அதை சமாளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் புலனாய்வுக் குழுவின் உறுப்பினர் Ha Tae-kyung, உளவுத் தலைவர்களுக்கான கடந்த வியாழக்கிழமை நடந்த மாநாட்டின் போது, இந்த அதிகாரங்கள் மாற்றப்படுவது குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், கிம் ஜாங்-உன் தனது முழுமையான அதிகாரத்தை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் சிலவற்றை மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பிரபல ஊடகமான Chosun Ilbo தெரிவித்துள்ளது. இதே போன்று அங்கிருக்கும் துணை அதிகாரிகள் சிலருக்கும் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்
