அமெரிக்காவில் தங்க நிறத்தில் காணப்படும் வினோத வண்டு ஒன்றின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
என்ன மைனா பேசுது?.. வைரலாகும் வீடியோ.. குழம்பிப்போன நெட்டிசன்கள்..!
தங்க ஆமை வண்டு
பார்ப்பதற்கு ஆமை போலவே இருக்கும் இந்த சின்னஞ் சிறிய வண்டுகள் தங்க நிறம் கொண்டவை. Charidotella Sexpunctata என்றும் இந்த வண்டுகள் அழைக்கப்படுகின்றன. அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த வண்டுகள் இலைகளை உண்டு உயிர் வாழ்கின்றன.
மிசோரி பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, "தங்க ஆமை வண்டு, மற்ற ஆமை வண்டுகளைப் போலவே கிட்டத்தட்ட வட்டமாகவும், தட்டையாகவும் இருக்கும், மேலும் ப்ரோனோட்டம் என்னும் கவசம் இந்த வண்டுடைய தலையின் மேற்பகுதியை முழுவதுமாக மறைக்கும். இவை உயிருடன் இருக்கும்போது தங்க நிறத்திலோ அல்லது ஆரஞ்சு நிறத்திலோ காட்சியளிக்கும். இவற்றின் பக்கவாட்டு இறக்கைகள் ஒளி புகும் தன்மை கொண்டவை" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நிறம் மாறும்
புளோரிடா பல்கலைக்கழகத்தில் தனித்துவமான பூச்சி இனங்கள் பற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் இந்த வகை வண்டுகள் முட்டை முதல் முழுமையான வண்டாக மாற 40 நாட்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது .
தங்க ஆமை வண்டு அமெரிக்காவின் மேற்கு அயோவா மற்றும் டெக்சாஸ் வரை பரவலாக காணப்படுகிறது. புளோரிடாவில் காணப்படும் மூன்று வகை ஆமை வண்டுகளில் இதுவும் ஒன்றாகும். நியூ ஜெர்சியில் இந்த வண்டுகள் மே அல்லது ஜூன் மாதத்தில் தோன்றி, களைகளை உண்ணத் தொடங்கி, அதன்பின் விரைவில் முட்டைகளை இடுகின்றன. ஜூலை மாதத்தில் இவை நன்கு வளர்ந்து தங்க நிற வண்டுகளாக காட்சியளிக்கின்றன.
வைரல் வீடியோ
அமெரிக்காவில் காணப்படும் இந்த அரியவகை வண்டுகளின் வீடியோக்கள் அவ்வப்போது பல்வேறு மக்களால் இணையத்தில் பகிரப்படுவது உண்டு. அந்த வகையில், தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒருவரது கையில் ஊர்ந்து செல்லும் 3 வண்டுகள் விரல்களில் ஏறி பின்னர் அழகாய் பறந்து செல்கின்றன.
இதுவரையில் இந்த வீடியோவை 9.54 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
The Golden Tortoise. Awesome Nature pic.twitter.com/J3IQ8KXFLU
— Amazing Nature (@AmazingNature00) April 11, 2022
"உழைச்சவங்களுக்கு நல்லது செய்யணும்".. 100 ஊழியர்களுக்கு பிரபல நிறுவனர் அளித்த நெகிழ்ச்சி பரிசு..!