மைனா ஒன்று மனிதர்களை போலவே பேசும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
![Myna speaking like humans video goes viral Myna speaking like humans video goes viral](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/myna-speaking-like-humans-video-goes-viral.jpg)
"உழைச்சவங்களுக்கு நல்லது செய்யணும்".. 100 ஊழியர்களுக்கு பிரபல நிறுவனர் அளித்த நெகிழ்ச்சி பரிசு..!
மைனா
பொதுவாக தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் மட்டுமே காணப்படும் மைனா தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இந்த இனம் அதிகமாக காணப்படுகிறது. காட்டு உயிரியாக கருதப்படும் இந்த பறவை இனத்தை சிலர் தங்களது செல்லப் பிராணியாகவும் வளர்த்து வருகின்றனர். அப்படி வளர்க்கப்பட்ட ஒரு மைனா பேசும் வீடியோ ஒன்று தான் இப்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
பேசும் மைனா
தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் பெண்மணி ஒருவரின் அருகில் நிற்கும் மைனா சகஜமாக அங்கும் இங்கும் தவ்வி குதிக்கிறது. அந்த வீடியோவில் அப்பெண் "என்னன்னு கேளு" எனச் சொல்ல, மைனாவும் 'என்ன' என்கிறது. இதனை தொடர்ந்து அங்கிருக்கும் சிலர் மைனாவிடத்தில் பேச்சுக் கொடுக்க அது மீண்டும் 'என்ன' என்கிறது.
இது உண்மையாகவே மைனா பேசியது தானா? அல்லது பல்குரல் வித்தகர் யாராவது மைனாவிற்கு டப்பிங் செய்திருக்கிறாரா? என்பது தெரியவில்லை. ஆனால், இணையத்தை இந்த மைனா கலக்கிவருவது மட்டும் உண்மை.
குழம்பிப்போன நெட்டிசன்கள்
மனிதர்களுடன் சகஜமாக பேசும் இந்த மைனாவின் வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதனை கண்ட பலர் "மைனாவை எப்படி பேசப் பழக்க முடியும்?" என்றும் "இது மைனா தானா?" என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
ஆனால், சிலர் கிளிகளை போலவே மைனாக்களை பேச பழக்கலாம் என கூறிவருகின்றனர். கிளிகளை போலவே மைனாக்களும் மனிதர்களின் குரலை மிமிக்ரி செய்யும் திறன் கொண்டவை என்றும் அவற்றால் 100 வார்த்தைகள் வரை தங்களது நினைவில் வைத்துக்கொள்ள முடியும் எனவும் சொல்லப்படுகிறது.
மனிதர்களை போலவே பேசும் இந்த மைனாவின் வீடியோ பலரையும் ஈர்த்துள்ள அதே சமயத்தில் பலரையும் இந்த வீடியோ குழப்பத்தில் ஆழ்த்தியும் இருக்கிறது.
இது மைனா தான . எப்படி பழக்கப்படுத்த முடியும் .. ஜஸ்ட் வாவ் 😍😍 pic.twitter.com/WnM7RnLanO
— 🅿️🔼🅱️⛸️⭕ -- 🤡 (@Dravida_oviyan) April 11, 2022
"கொரோனா விஷயத்துல இதை சாதிக்க உதவுன எல்லோருக்கும் நன்றி"…. பிரபல மருத்துவனை Dean நெகிழ்ச்சி தகவல்!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)