பால் வாங்க கடைக்கு போனவர்.. பால்பண்ணை வைக்கும் அளவிற்கு கோடீஸ்வரர் ஆயிட்டார்.. வாழ்க்கைய புரட்டி போட்ட சம்பவம்
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா: அமெரிக்காவில் ஒரு நபர் பால் வாங்க கடைக்கு சென்ற நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக சொந்தமாக ஒரு பால்பண்ணை தொடங்கும் அளவிற்கு கோடீஸ்வரராக மாறியிருக்கிறார்.

அடுத்த நிமிடம் என்ன நடக்க போகிறது என்பதனை அறிய முடியாத சுவாரஸ்யமானது தான் மனித வாழ்க்கை. அது அளவற்ற மகிழ்ச்சியை தரும். தாங்க முடியாத சோகத்தை தரும். வாழ்நாள் முழுவதும் தேடி அலைந்த லட்சியம் ஒரே தினத்தில் வசப்படும். இப்படியாக கனவில் கூட நினைக்காத சில காரியங்கள் திடீரென நடந்து அதிர்ச்சியை அளிக்கும்.
இது உண்மையில் நடந்துள்ளதா இல்லை பிரமையா என்று தோன்றும் அளவிற்கு நடக்கும். ஒரே நிமிடத்தில் உலகப் புகழ் அடைந்த மக்களும் உண்டு. சாதாரண நிலையில் வாழ்ந்து வந்தவர்கள் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் ஆன கதையும் உண்டு. அதனாலையே பல மக்கள் அதிர்ஷ்டத்தை நம்புவது உண்டு. அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி வீணாப் போனவர்கள் பலர். ஆனால், அது நடக்கும் என எதிர்பாரமால் பல சம்பவம் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.
குழந்தைகளுக்கு சாக்லெட் பால்:
இப்படி இருக்கும் நிலையில், அமெரிக்காவில் வர்ஜினியா என்னும் பகுதியில் இருக்கும் வடக்கு செஸ்டர்ஃபீல்டை சேர்ந்த டென்னிஸ் வில்லோபி என்ற நபர் தன் அன்பு குழந்தைகளுக்கு சாக்லேட் பால் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அப்போது எதேச்சையாக லாட்டரி சீட்டை பார்த்தவர், அதை வாங்கினால் என்ன நேற்று மனம் சலனப்பட்டுள்ளது. உடனே காசு கொடுத்து அந்த லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
வாழ்க்கையை மாற்றிய லாட்டரி சீட்டு:
அந்த லாட்டரி சீட்டு தான் தற்போது அவரின் வாழ்க்கையே மாற்றியமைத்து விட்டது. அவருக்கு, 1,000,000 பிளாட்டினம் பரிசுத் தொகை விழுந்திருக்கிறது. அதாவது இந்த லாட்டரி விளையாட்டிலேயே அதிகமான சிறப்புப் பரிசை பெற்றவர் இவர் தான்.
இவ்வளவு தொகை பரிசை வென்ற இரண்டாம் அதிஷ்டசாலியாக டென்னிஸ் உள்ளார். இதில் வெற்றி வாய்ப்பு என்பது 1,632,000-ல் ஒருத்தருக்கு தான் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்
