வாழ்ந்தா.. பேருந்திலேயே உலகம் சுற்றும் குடும்பம்.. உள்ளே இவ்வளவு வசதிகளா..?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Feb 23, 2023 09:51 PM

ஜெர்மனியை சேர்ந்த குடும்பத்தினர் தங்களுடைய சொகுசு பேருந்தில் உலக சுற்றுலா சென்றுவருகின்றனர்.

German Family world Tour in Bus with ultra Modern Facilities

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | என்ன சூட்கேஸ் வெயிட்டா இருக்கு?.. அதிகாரிகளுக்கு வந்த டவுட்.. அடுத்த நிமிடமே ஷாக்.. வீடியோ

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் காய் சாகத் - நீனா தம்பதியர் இருவரும் துபாயில் குடியேறி அங்கு பணிபுரிந்து வருகின்றனர். உலகை சுற்றிப்பார்க்க விருப்பப்பட்ட இருவரும் இதுகுறித்து பல நாட்களாக சிந்தித்து வந்திருக்கின்றனர். அப்போது, பேருந்திலேயே ஓர் உலக சுற்றுலா செல்லலாம் என இருவரும் முடிவெடுத்திருக்கின்றனர். 

அதன்படி 10 லட்ச ரூபாய்க்கு ஒரு பேருந்தை வாங்கியுள்ளனர். அதனை மறுவடிவமைப்பு செய்ய முடிவெடுத்த இருவரும் அதற்காக 40 லட்ச ரூபாயை செலவழித்திருக்கின்றனர். அதன்படி, பேருந்திற்குள் படுக்கையறை, சமையலறை, குளியலறை, வாஷிங் மிஷின் என வீடு போலவே அனைத்து அம்சங்களையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பேருந்து.

German Family world Tour in Bus with ultra Modern Facilities

Images are subject to © copyright to their respective owners.

கட்டுமான நிறுவனம் ஒன்றில் நீனா ப்ராஜெக்ட் மேனேஜராக இருந்து வருகிறார். காய் சொந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் ஆகஸ்டில் உலகை சுற்றும் இவர்களது பயணம் துவங்கியிருக்கிறது. இதற்காக இவர்கள் 70 பேருந்துகளில் இருந்து தங்களுக்கு ஏற்றபடியான ஒன்றை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இதில் 350 லிட்டர் பெட்ரோல் போட முடியும் எனவும் இதன்மூலம், 2300 கிலோமீட்டர் பயணிக்கலாம் எனவும் சொல்கிறார்கள் இந்த தம்பதியினர்.

German Family world Tour in Bus with ultra Modern Facilities

Images are subject to © copyright to their respective owners.

துபாயில் துவங்கிய இவர்களது பயணம் ஆசிய நாடுகளில் 6 மாதங்களும், தென்னமெரிக்க நாடுகளில் 6 மாதங்களையும் செலவழிக்க திட்டமிட்டிருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது இந்த குடும்பத்தினர் சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்திற்கு வந்திருக்கின்றனர். அங்குள்ள பழங்கால குகைகள், கடற்கரை ஆகியவற்றை சுற்றிப்பார்த்த இந்த தம்பதி இன்னும் சில நாட்களில் இங்கிருந்து கிளம்ப இருக்கின்றனராம்.

German Family world Tour in Bus with ultra Modern Facilities

Images are subject to © copyright to their respective owners.

உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என பலரும் ஆசைப்படும் நிலையில், சொகுசு பேருந்தில் குடும்பத்தினருடன் உலகத்தை சுற்றிவரும் காய் சாகத் - நீனா தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "இந்த 5 இந்திய படங்களையும் பாருங்க".. அமெரிக்காவில் பகிர்ந்த ராஜமௌலி .. List-ல வெற்றிமாறன் படமும் இருக்கு..!

Tags : #GERMAN FAMILY #GERMAN FAMILY WORLD TOUR #BUS #ULTRA MODERN FACILITIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. German Family world Tour in Bus with ultra Modern Facilities | World News.