ஆம்னி பஸ்ஸை கழுவிய டிரைவருக்கு நேர்ந்த சோகம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மின் மோட்டார் மூலம் ஆம்னி பஸ்ஸை கழுவும்போது மின்சாரம் தாக்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 22). இவர் ஆம்னி பேருந்து டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கணேசன் நேற்று வானகரம் பேருந்து நிறுத்தம் அருகே ஆம்னி பேருந்தை நிறுத்தி மின்மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கணேசன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார், உயிரிழந்த கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
